Posts

Showing posts from September, 2022

உபை இப்னு கஅப்(ரலி) முஸ்ஹஃப்பில் அல்ஹஃப்த் மற்றும் அல்ஃஹலா ஸுராக்கள்

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ                குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களின் வரிசையில் அடுத்தாக இடம் பெறும் பகுதி உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் அதிகப்படியான இரண்டு சூராக்களை குர்ஆனின் பகுதியாக கொண்டிருந்தார்கள், அது இன்றைய குர்ஆனில் இடம்பெறவில்லை என்பதாகும். அது குறித்த இஸ்லாமோஃபோபுகளின் வாதத்தையும், அதற்கு அடிப்படையாக அமைந்த ஆதாரங்களையும் அதற்கான பதிலையும்  பார்ப்போம். இஸ்லாமோஃபோபுகளின் ஆதாரங்களும் விமர்சனங்களும் நமது பதில்   உபை இப்னு கஅப்(ரலி)அவர்களது முஸ்ஹஃப் உஸ்மான்(ரலி) அவர்களிடம் ஹிஜ்ரி 30ல் ஒப்படைக்கப்படுதல் உபை இப்னு கஅப்(ரலி)அவர்களது முஸ்ஹஃப் என்று ஹி30க்கு பிறகு கூறப்படுபவற்றில் காணப்பட்ட முரண்பட்ட வசனங்கள் ஆய்வினால் பெறப்படும் இறுதி முடிவுகள்   ஆதாரம்: عَنِ ابْن سِيرِينَ، قَالَ: كَتَبَ أُبَيُّ بْنُ كَعْبٍ فِي مُصْحَفِهِ فَاتِحَةَ الْكِتَابِ وَالْمُعَوِّذَتَيْنِ، وَاللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ، وَاللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ இப்னு ஸீரின் கூறியதாவது,  "உபை இப்னு கஅப்(ரலி) அவரது முஸ்ஹஃபில் அல் ஃபாத்திஹா, அல் முஅவ்விததைன்

உபை இப்னு கஅப்(ரலி)யும் அவர்களது ஓதலும்

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ   குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களில் அடுத்ததாக முக்கிய இடத்தை வகிப்பது நபித்தோழர் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலை அடிப்படையாக கொண்டதாகும். அதாவது நபி(ஸல்) அவர்களால் குர்ஆன் ஓதிக்கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நபித்தோழராகிய உபை இப்னு கஅப்(ரலி) அவர்களின் ஓதலில் உமர்(ரலி) அவர்கள் சில பகுதிகளை விட்டு விட்டதாக கூறுகிறார்கள். என்வே உபை இப்னு கஅப்(ரலி) அல்லாத நபித்தோழர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட குர்ஆன்தான் இன்றிருப்பது என்பது இஸ்லாமோஃபோபுகளின் வாதம். அதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும், அதன் ஊடாக அவர்கள் எழுப்பும் வாதத்தையும் பார்த்துவிட்டு அதற்கான நமது விளக்கத்தையும் பார்ப்போம் இன் ஷா அல்லாஹ். இஸ்லாமோஃபோபுகளின் ஆதாரங்களும் விமர்சனங்களும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் இருந்து குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்ற நபி(ஸல்) அவர்களது கூற்று- விளக்கம் உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே முழு குர்ஆனையும் கற்றிருந்தார்கள்- விளக்கம் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை உஸ்மான்(ரலி) அவர்கள் குர்ஆன் தொகு