Posts

Showing posts from August, 2019

இஸ்லாம் கூறும் பலதார மணத்தில் பெண்ணின் உரிமை

Image
ஏக இறைவன் அல்லாஹ்வின்  திருப்பெயரால்              இந்த பதிவானது பலதார மணம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன என்பதை தெளிவாக இஸ்லாமிய சகோதர்ரகளுக்கும் இஸ்லாமிய எதிர்பாளர்களுக்கும் விளக்கவே. பொதுவாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் பலதார மணம் குறித்து பேசும் போது பெண்ணின் உரிமை பாதிப்பதாகவே வாதிடுவார்கள். மேலும் இதனால் முதல்தாரத்தின் உரிமை பறிக்கப்படுவதாகும் வாதிடுவார்கள். உண்மையில் இஸ்லாமின் பலதார மணம் குறித்த பார்வையை தெளிவு படுத்தினாலே பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எப்படி இஸ்லாம் வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் கடமைகளையும் வழங்கியுள்ளது என்பது தெளிவாக விளங்கும் இன் ஷா அல்லாஹ். இஸ்லாம் கூறும் பலதாரமணம்: وَإِنْ خِفْتُمْ أَلا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلا تَعُولُوا (٣)    அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (

தும்மலின் போது இறைவனைப் புகழ்வது ஏன்?

Image
முஸ்லிம்கள்  உலகின் எந்தப்பகுதியிலிருந்தாலும், எந்த மொழி பேசினாலும் தும்மலின்  போது இதைத் தான் கடைபிடிக்கின்றனர். தும்மியவர்  "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லாப்புகழும் இறைவனுக்கே) என்று கூறுவார். அதைக் கேட்கும்  மற்றொருவர், "உங்களின் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்" (யர்ஹமுகல்லாஹ்) என்று கூறுவார். இறுதியாக தும்மியவர், "இறைவன் உங்களுக்கு  நேர் வழி   காட்டட்டும்" (யஹ்தீக்குமுல்லாஹ்) என்று கூறுவார். தும்மியவர் எதற்கு இறைவனைப் புகழவேண்டும்? நவீன் அறிவியல் கூறும் காரணங்கள் இதோ: மனித தும்மிலிருந்து வரும் காற்று மணிக்கு 100 மைல் வேகத்தில் பயணிக்க முடியும் கடுமையான தும்மலால் விலா எலும்பு உடையக்கூடும் தும்மலின் போது மூக்கு மற்றும் வாயை மூடிக்கொண்டு தும்மினால் , நுரையீரலிலிருந்து காற்று வெளியாக முடியாமல் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும் . மரணம் கூட ஏற்படலாம் . தும்மலின் போது , இருதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகின்றது .. அந்த ஒரு நொடியில் இருதயம் நின்று போகலாம்          எல்லாப் புகழு

நபி(சல்) அவர்கள் பிணத்துடன் உறவு கொண்டார்களா????

Image
ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால்                             மிசனரிகள் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து நபி(சல்) அவர்கள் மீது பரப்பப்படும் அவதூறுகளில் இதுவும் ஒன்று. அதாவது நபி(சல்) அவர்கள் அலி(ரலி) யின் தாயார் ஃபாத்திமா பின்த் அசத்(ரலி) அவர்கள் மரணித்த போது அவரது பிரேதத்துடன் உறவு கொண்டார்கள் என்பதுதான். ஃபாத்திமா பின்த் அசத்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது பெரிய தந்தையான அபூதாலிப் அவர்களது மனைவியும், நபி(சல்) அவர்களது பெரியன்னையும் ஆவார்கள், மேலும் நபி(சல்) அவர்களது தாயாரான ஆமினா அவர்கள் மரணித்த,  பிறகு நபி(ஸல்) அவர்களை வளர்த்த அன்னை ஆவார்கள். இவர்களது பிரேத்துடந்தான் நபி(சல்) அவர்கள் உறவுகொண்டார்கள் என்ற அவதூறை பரப்பி திரிகின்றனர். அது குறித்து இஸ்லாமிய ஆதாரங்களான ஹதீஸ்களில் என்ன காணப்படுகிறது என்பதை காண்போம். இது குறித்து இரண்டு செய்திகள் காணப்படுகிறது:  செய்தி 1:  حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ، ثَنَا مُحَمَّدُ بْنُ غَالِبِ بْنِ حَرْبٍ َحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْبُسْتِنْبَانِ بِسُرَّ مَنْ رَأَى، قَ