Posts

Showing posts from November, 2018

தொடர் 2: பரிணாமம் : உண்மையா ஊகமா?

Image
           அல்லாஹ்வின் திருப்பெயரால்        நாம் நவீன பரிணாமம் குறித்து பார்ப்பதற்கு முன்பு பரிணாமத்திற்கு டார்வினிஸம் அல்லாத மாற்று பரிணாமவியல் கோட்பாடுகள் மற்றும் அதன் மறுப்பையும் சற்று பார்த்துவிடுவது நமக்கு பரிணாமவியலின் இன்றைய நவீன நிலைபாட்டை ஆய்வு செய்யவும் விமர்சிக்கவும் துணையாக இருக்கும். அந்த வரிசையில்  டார்வினஸத்திற்கு மாற்றாக கூறப்பட்ட கோட்பாடுகளில் லாமார்கிஸமும் ஒன்று. இந்த தொடரில் லாமார்க்கிஸம் குறித்தும் அதன் அறிவியல் மறுப்பு குறித்தும் பார்த்து விடுவோம் இன் ஷா அல்லாஹ் லாமார்க்கிஸம் : சந்ததிகளில் தோன்றும் பெறப்பட்ட குணங்கள் ( Inheritance of acquired characters)           லாமார்க் என்ற அறிஞர் 1809ம் ஆண்டு “சந்ததிகளில் தோன்றும் பெறப்பட்ட குணங்கள்( Inheritance of acquired characters )” என்ற தனது கோட்பாட்டை முன்வைத்தார். அதாவது ஒரு உயிரின் குறிபிட்ட ஒரு உறுப்பின் பயன்பாட்டிற்கு ஏற்ப உயிரினங்களின் தலைமுறை தலைமுறையாக அந்த உறுப்பில் மாற்றங்கள் தோன்றும் என்ற கொள்கையை முன்வைத்தார். இதனை பெறப்பட்ட குணங்கள்( Acquired Characteristics) என்று உயிரியலாளர்கள் குறிப்