Posts

Showing posts from January, 2018

எதிர்தொடர் 26: நபி(சல்) அவர்களது விண்ணுலகப் பயனம்

Image
ஏக இறைவனின் திருப்பெயரால்        நபி(ஸல்) அவர்களது விண்ணுலகப் பயனம் குறித்த விமர்சனத்தை இம்முறை கட்டுரையாளர் முன்வைத்துள்ளார் (1) . நபி (சல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் ஒரு பகுதியாக பைத்துல் முக்கத்தஸ் பள்ளிக்கு சென்றதாக., அதாவது சுலைமான் அலை அவர்களால் கட்டியெழுப்பப்பட்டு பல முறை புணரமைக்கப்பட்ட ஆலயத்திற்கு சென்றதாக இஸ்லாமிய ஆவணங்கள் கூறுகின்றன. அதை மறுக்க புகுந்த கட்டுரையாளர். ஜெருசலேத்தில் அந்த ஆலயம் இல்லை அது இடிக்கப்பட்டுவிட்டது என்பதை நிறுவுவதன் மூலம் அந்த ஆலயத்திற்கு நபி(சல்) அவர்கள் சென்றதாக கூறப்படும் குர்ஆனின் வசனங்களும், ஹதீஸ்களும் இட்டுகட்டப்பட்ட கட்டுகதைகள் என்று நிறுவ கட்டுரையாளர் முற்பட்டுள்ளார். ஆனால் இந்த கருத்தானது கட்டுரையாளர் இன்னும் வரலாறு குறித்து அப்டேட் ஆகவில்லை என்பதையே காட்டுகிறது. அதற்கான தக்க ஆவணங்களை சமர்ப்பித்து மேற்குறிப்பிட்ட செய்திகள் யாவும் உண்மையே என்பதை இன்ஷா அல்லாஹ் நிறுவுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். குற்றச்சாட்டு 1: நெஞ்சம் பிளந்து பாவத்தை நீக்க முடியுமா: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:                   அ