Posts

Showing posts from July, 2016

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-5-புதிய ஏற்பாடு: ஒர் அறிமுகம்

Image
ஏக இறைவனின் திருப்பெயரால்    நாம் கிறித்தவ நம்பிக்கைக்கு யார் காரணம் என்ற தலைபிட்ட கட்டுரைக்கு மறுப்பாக இந்த எதிர்தொடர் கட்டுரையை தொடராக தந்து கொண்டிருக்கிறோம். [refer: Source ]  சென்ற தொடர்களில் பழைய ஏற்பாடு குறித்து பதிவு செய்தோம். இந்த தொடரில் புதிய ஏற்பாடு குறித்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ். நாம் சென்ற பழைய ஏற்பாடு குறித்த ஆய்வு தொடரில் கையாண்ட அதே முறையையே இந்த தொடருக்கும் பயன்படுத்த வுள்ளோம். அதாவது புதிய ஏற்பாடின் மூலங்களின் ஆசிரியர் குறித்து ஆய்வு செய்ய வெளிப்புற ஆதாரங்கள் மற்றும் உள் ஆதாரங்களை ஒப்பீடாக வழங்க உள்ளோம். இன்ஷா அல்லாஹ். புதிய ஏற்பாட்டின் மூல ஏடுகள்: இன்று கிறித்தவர்கள் கைகளில் இருக்கும் புதிய ஏற்பாடானது ஏற்று கொள்ளப்பட்ட 27 ஆகமங்களை கொண்டுள்ளது. ஏசுவின் மொழி அரமாயிக்காக இருந்தாலும் புதிய ஏற்பாடின் மூல ஏடுகள் யாவும் கிரேக்க ஏடுகள்தான். அவற்றில் மிக பழமையான சில சுருள்கள் கிழே தரப்பட்டுள்ளது. மேலும் புதிய ஏற்பாட்டின் ஆகமங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக பாப்பிரேய சுருள்களில் காணப்பட்டாலும் புதிய ஏற்பாடு வடிவம் பெற தொடங்கிய காலம் மூன்றாம் நூற்றாண்டின் மத்திய

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-3 பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை

Image
ஏக இறைவனின் திருப்பெயரால் எதிர்தொடர் 19: உடைந்த சிலுவை- பாகம் 3: பழைய ஏற்பாடு             சென்ற தொடரில் நாம் பைபில் பழைய ஏற்பாட்டின் மூல ஆதாரங்களில் ஒன்றான செப்டகண் குறித்தும் அது குறித்த வரலாற்று தகவல்கள் எப்படி முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இருக்கிறது என்பதை கண்டோம். அதுவல்லாத சில மூலங்களையும் அடிப்படையாக கொண்டாதுதான் பழைய ஏற்பாடு என்பதாக கிறித்தவ உலகம் இன்று கூறிகொண்டுள்ளது. அவை குறித்து இந்த தொடரில் காண்போம். பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை:     பைபிலின் மூலங்களை விளக்கும் படத்தில் கீழே காட்டப்பட்டிருக்கும் சுருள்கள் இன்று நம்மிடம் இல்லை. சென்ற தொடரில் செப்டகணின் மூலங்களாக கூறப்படும் தொலைந்த சுருள்கள்தான் original manuscripts என்று இங்கு கூறப்பட்டுள்ளது. இன்று பைபிலின் மூலங்களால கூறப்படுபவையில் மிகப்பிரதானமானவை masoretic text மற்றும் சாக்கடல் சாசனச்சுருள்கள் தான். இவற்றை குறித்து சிறிது பார்த்துவிடுவோம்.             இந்த இரண்டில் காலத்தால் மிகப்பழமையானது கும்ரான் சாக்கடல் சாசனச் சுருள்கள்தான். கும்ரான் சாக்கடல் சாசனச்சுருள்கள்: