Posts

Showing posts from September, 2016

திருக்குர்ஆன் மலர்கள்: இந்தக் கூடுகளுக்குள் வாழ்ந்த ஆத்மாக்கள் எங்கே?

திருக்குர்ஆன் மலர்கள்: இந்தக் கூடுகளுக்குள் வாழ்ந்த ஆத்மாக்கள் எங்கே? : மேற்கண்ட வீடியோவில் இன்றுவரை  உடல் அழுகாமல் பாதுகாக்கப்பட்ட சடலங்கள் சிலவற்றைக் காணலாம்.....  ஆம், சிலவற்றை நாம் இன்று காண முடிகிறது....

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-8: மார் ஷபா கடிதம்

Image
ஏக இறைவனின் திருப்பெயரால் மாற்கு சுவிஷேசமும் மார் சபா கடிதமும் இந்த கடிதமானது எருசலேமில் இருந்து 12 மைல் தொலைவில் உள்ள மார் சபா கிறித்தவ மடாலயத்தில் இருந்து மார்டான் ஸ்மித் என்ற அறிஞரால் 1958ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது மாற்கால் தோற்றுவிக்கப்பட்ட அலெக்ஸாண்டிரியாவின் திருச்சபையில் பயிற்றுவிப்பாளராக கிபி 200களில் பணியாற்றிய அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் அவர்களால் தியோடோர் என்பவருக்கு வரையப்பட்ட கடிதமாகும். இந்த கடிதமானது இக்னேஷியஸ் அவர்களின் கடிதங்களின் 17ம் நூற்றாண்டின் பதிப்பின் பின்பகுதியில் எழுத்து வடிவிலானதாக மார்டான் ஸ்மித் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதை புகைபடமும் எடுத்து கொண்டார் மார்டான் ஸ்மித். இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட மார்டான் ஸ்மித் அவர்கள் 1973 தனது ஆய்வு முடிவுகளை Clement of Alexandria and a Secret Gospel of Mark (Harvard University Press) என்ற புத்தகமாக வெளியிட்டார். இந்த ஆய்வு முடிவுகள் கிறித்தவ உலகத்தை அதிர்ச்சியில் உரையவே செய்துவிட்டது. அந்த கடிதத்தில் அப்படி என்னதான் உள்ளது. இதோ நமது வாசகர்களுக்காக அந்த கடித்த்தின் ஆங்கில மொழியாக்கம் F

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-7 மாற்கு சுவிஷேசம்

Image
ஏக இறைவனின் திருப்பெயரால் எதிர்தொடர் 19: உடைந்த சிலுவை பாகம்-7: மாற்கின் சுவிஷேசம்         சென்ற தொடரில் புதிய ஏற்பாட்டின் ஆகமங்களில் எண்ணிக்கை குறித்த முரண்பட்ட நிலையை எடுத்து கூறினோம். இந்த தொடரில் இந்த ஆகமங்களின் உன்மைதன்மை குறித்தும் இதை இயற்றியவர்கள் உன்மையில் ஏசுவை கண்டவர்களா? அல்லது ஏசுவின் சீடர்களை கண்டவர்களா என்பதையும் புதிய ஏற்பாட்டில் காணப்படும் நான்கு சுவிஷேசங்களின் நிலையையும் ஆய்ந்து அறிவோம் இன்ஷா அல்லாஹ். மாற்கின் சுவிஷேசம் :       இந்த சுவிஷேசம் தான் இன்று இருக்கும் கிறித்தவ அறிஞர்களால் நான்கு சுவிஷேசங்களிலும் மிகப்பழமையானது என்று கொள்ளப்படுகிறது. பரப்பரியமாக எபிரேய மத்தேயுதான் பழமையானது என்று கூறப்பட்டாலும் இன்று இருக்கும் மத்தேயு எபிரேய மத்த்தேயு அல்ல. இன்று இருக்கும் மத்தேயு கிரேக்க மொழியிலான மொழிபெயர்ப்பு என்று உறுதி செய்யப்பட்டதால் மாற்குதான் மிகப்பழமையானது என்று கொள்ளப்படுகிறது. மாற்கு சுவிஷேசமானது கிபி 70 களில் அதன் மூல மொழியான கிரேக்க மொழியில் இயற்றப்பட்டது. மாற்கு சுவிஷேசம் 5 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. அத்தியாயம் 1.1 முதல் 1.13 வ