Posts

Showing posts from March, 2022

கல்லெறி தண்டனை குர்ஆனில் காணவில்லையா???

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ     குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற இஸ்லாமோஃபோபுகளின் குற்றச்சாட்டில் மிக பிரதானமான இடத்தை பிடிக்கும் வாதம் குர்ஆனில் இருந்த கல்லெறி தண்டனை தொடர்பான வசனம் காணவில்லை என்பதாகும். அதாவது திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்ததற்காக பிடிக்கப்பட்டால் அவர்களின் மீது கல்லெறிதல் என்ற தண்டனை நிறைவேற்றப்படுதல் குறித்த வசனம் நபி(சல்) அவர்களது காலத்தில் குர்ஆனில் இருந்ததாகவும், அது தற்போதைய குர்ஆனில் காணவில்லை அல்லது உஸ்மான்(ரலி) தொகுத்த குர்ஆனில் காணவில்லை என்ற குற்றச்சாட்டுதான் அது. அதற்கு இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரங்கள் மற்றும் அதன் விளக்கத்தையும் காண்போம். இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரங்களும் வாதங்களும் கல்லெறி தண்டனை வசனம் காணாமல் போனதா - ஆதாரங்கள் குறித்த விளக்கங்கள் விளக்கம் 1: கல்லெறி தண்டனை வசனம் குர்ஆனில் இறங்கிய வசனம் பின்பு அது உயர்த்தப்பட்டுவிட்டது சட்டம் வழக்கில் உள்ளது. விளக்கம் 2: கல்லெறி தணடனை வசனம் குர்ஆனின் ஆயத்தாக என்றும் இருந்ததில்லை. அது இறை சட்டமாகவே வந்தது. அல்லாஹ் அருளியதில் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது -என்