Posts

Showing posts from April, 2015

அர்த்தமுள்ள கேள்விகள் - 11 - மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்?

Image
நாத்திகர்கள் & பகுத்தறிவாதிகள் பொதுவாக எழுப்பும் கேள்விகளில் இதுவும் ஒன்று முஸ்லிம்கள் ஆதாம், ஏவாலில் இருந்து வந்ததாக சொல்கின்றனரே அப்போது ஏன் மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் காணப்படுகின்றனர் என்று?? நியாயமான கேள்விதான் இதற்கு நமது பதில், கேள்வி:  ஒரு இந்து சகோதரரிடம் உரையாடும் போது 'மனித சமுதாயம் ஆதம்' ஹவ்வா' எனும் இருவர் வழியாகவே உருவாகியுள்ளது'என்று கூறினேன். அதற்கு அவர் அப்படியெனில் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், ஆதிவாசிகள் வெவ்வேறு தோற்றத்துடன் இருக்கிறார்களே? என்றார். இதற்கு எப்படி விளக்கம் கொடுக்க வேண்டும்? பதில்: இந்த வாதத்தில் உள்ள அடிப்படைத் தவறை விளக்கினாலே போதும். ஒரு தாய்க்கும், ஒரு தந்தைக்கும் பிறந்தவர்கள் ஒரே தோற்றத்தில், ஒரே நிறத்தில் இருப்பார்கள் என்ற அடிப்படையே தவறாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சிஎதுவும் தேவையில்லை. உங்கள் குடும்பத்தில், உங்கள் தெருவில், உங்கள் ஊரில் உள்ளவர்களை ஆராய்ந்தாலே போதுமானதாகும். ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த அண்ணன் தம்பிகளை முரண்பட்ட நிறத்திலும், தோற்றத்திலும் சர்வசாதாரணமாக நாம்பார்க்கிறோம். அவர்க

"பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்"- இஸ்லாம், உணவுக்காக பசுவை கொல்வதை தடைசெய்கின்றதா?

Image
"பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்", என்ற தலைப்பில் முகநூளில் வந்த பதிவிற்கு, பதில். இதை பார்க்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும்,  இது  இஸ்லாம் சொன்னது அல்ல என்று தெரிந்துவிடும். மாற்று மத சகோதரர்களுக்கு தெளிவாக்க வேண்டும் என்ற காரணத்தினால் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்று எதையேனும் கொண்டுவந்தால், அது இந்த இரண்டு மட்டுமே: 1. திருக்குரானில் இடம்பெற்று இருக்கவேண்டும் 2. ஆதாரபூர்வமான நபிவழியாக இருக்கவேண்டும்  இது அல்லாமல், யார் என்ன சொன்னாலும், அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் எடுபடாது. இதை மனதில் படிய வைத்துக்கொள்ளுங்கள். மற்ற மதங்கள் போல் கலப்படம் செய்ய முடியாமல் போனதற்கு மேலே சொன்ன அடிப்படை அளவுகோல்கள் தான் காரணம். உலகம் அழியும் வரை எவராலும் இதை மாற்ற முடியாத அளவிற்கு இருப்பதால் தான் இஸ்லாம் தனித்து நிற்கின்றது. //• அரபு தேசங்களை இஸ்லாமின் கீழ் ஒரே ஆட்சிக்கு அடிகோலிய ஹசரத் முகம்மது அவர்கள், “பசுவின் பால் ஒரு மருந்து; அதன் நெய் அமிர்தம்; அதன் மாமிசம் ஒரு நோய்”//  மேலே சொல்லப்பட்ட ஹதீத், " முலய்காஹ் பின்த் உமர்"   என்பவரின்

Darwin-னின் பரிணாமக் கொள்கைக்கு அறிவியல் அடிக்கும் ஆப்பு!

Image
பகுத்தறிவாள நாத்தீகர்களிடம் நீங்கள் விவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவர்கள் பகுத்தறிவிற்கு ஆதரவாக எப்பொழுதும் கீழ் வரும் விசயங்களைத் தவராமல் பட்டியலிடுவார்கள்.  அறிவியல் மனித சமூகம் சந்தித்த கொள்ளை நோய்களை இல்லாமல் ஆக்கிவிட்டது, மனிதர்களின் வாழ்வை எளிமையாக்கிவிட்டது, கடுமையான நோய்களுக்கும் மருந்து கண்டுவிட்டது, மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திவிட்டது, மனிதர்களின் இறப்பு விகிதத்தை குறைத்துவிட்டது, மன ிதனின் ஆயுளை அதிகரித்துவிட்டது. இப்படியாகப்பட்ட நாத்தீகர்களின் அறிவியல் குறித்த புளித்த விளக்கங்களைக் கேட்டு உங்களுடைய காதுகளுக்கு மந்தத் தன்மை வந்திருந்தால் நிச்சயம் நீங்கள் படித்தே ஆகவேண்டியக் கட்டுரை இது. யாம் ஏற்கனவே பகுத்தறிவாள நாத்தீகர்கள் பிடித்துக்கொண்டு அழும் டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு பின்னால் இருக்கும் அரசியலைக் குறித்து இந்த தளத்தில் ஒரு கட்டுரைத் தொடரை எழுதிவிட்டமையால் மீண்டும் ஒருமுறை டார்வினின் பரிணாமக் கொள்கை தவறு என்று நிருபிக்கப்போவதில்லை. மாறாக பகுத்தறிவாள நாத்தீகர்களின் சாப விமோசனமான அறிவியல் எப்படி டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு ஆப்பு அடிக்கிறது

எதிர் தொடர் 12: இஸ்லாம் எந்த வகையான ஒழுக்க நெறிகளை போதிக்கிறது

Image
அல்லாஹ்வின் திருப்பெயரால்… எதிர்தொடர் 12 : இஸ்லாம் எந்த வகையான ஒழுக்கநெறியை போதிக்கிறது       இந்த கட்டுரையில் ஒரு சேர பல குற்றச்சாட்டுகளை கட்டுரையாளர் அடுக்கியுள்ளார். [refer: Source ]  அடிமை முறை குறித்து முன் சென்ற கட்டுரையில் தெளிவாக கண்டுவிட்டோம். அவரது அறியாமை இந்த தொடரிலும் பல்லிளிக்கிறது. இந்த தொடரில் அவரது அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரப்பூர்வமான சான்றுகளைக் கொண்டு பதிலளித்துள்ளோம். குற்றச்சாட்டு 1: நமது பதில்: உமர்(ரலி) அவர்களை கண்டு விருண்டோடும் ஷைத்தான்கள்:             இந்த தொடரில் உமர்(ரலி) அவர்களின் நச்சரிப்பால்தான் பர்தா வந்ததாக உளரியுள்ளார். அது தவறு என்பதை சென்ற தொடர்களில்( எதிர் தொடர் 10) விளக்கியுள்ளோம். அது போகட்டும் இந்த தொடரில் உமர்(ரலி) அவர்களின் ஒழுக்கத்தை எடை போட முற்பட்டுள்ளார். அவர் பதிவு செய்த ஆதாரம் இதோ,  أخبرنا محمد بن عمر أخبرنا سيف بن سليمان عن قيس مولى بن علقمة عن داود بن أبي عاصم الثقفي عن سعيد بن المسيب قال خرج عمر بن الخطاب على أصحابه يوما فقال أفتوني في شيء صنعته اليوم فقالوا ما هو يا أمير المؤمنين قال مرت جارية ل

அர்த்தமுள்ள கேள்வி -10 - நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா? - மார்க்ஸ் வழி வந்த ரஷ்யாவே, மார்க்ஸை ஏன் ஓரம் கட்டியது?

Image
கேள்வி  :  மனிதனின்   அறிவு   நல்லதை   மட்டும்   ஏவுமா ,  தீயதையும்   ஏவுமா ?  காரல் மார்க்ஸ்   வாதிகள்   ' மனிதனின்   அறிவாற்றல்   தான்   எல்லாமே ;  மற்ற   எந்த   நம்பிக்கையும்  வீண் '  என்கிறார்கள் .  கல்லூரி   மாணவிகள்   இதைப்   பற்றி   அறிய   பெரிதும்   ஆவல் கொள்கிறார்கள் .  விளக்கவும் ! பதில்  :  மனிதனின்   அறிவு   மகத்தானது   என்பதில்   ஐயமில்லை .  பல   விஷயங்களை   அறிவு சரியாகவே   கண்டு   பிடித்து   விடும் .  ஆயினும்   சில   விஷயங்களில்   அறிவு   தவறிழைத்து விடுவதும்   உண்டு . பல   விஷயங்களை   அறிவு   சரியாகக்   கண்டு   பிடித்து   விட்டாலும்   அறிவின்   கண்டு பிடிப்பைக்   காலில்   போட்டு   மிதித்து   விட்டு   வேறு   வழியில்   மனிதனை   இழுத்துச்   செல்லும் இன்னொரு   ஆற்றல்   மனிதனிடம்   இருப்பதை   யாரும்   மறுக்க   முடியாது . புகை   பிடிக்கும்   ஒருவரிடம்   புகை   பிடிப்பது   நன்மையா ?  எனக்   கேட்டால்   அதில்   உள்ள கேடுகளை   நம்மை   விட   விரிவாக   அவர்   விளக்குவார் .  அவரது   அறிவு   புகை   பிடிப்பதைத் தவறு   என்று   தீர்ப்பளித்த   பிறகும்   ஏன்   புகை