Posts

Showing posts from June, 2015

எதிர் தொடர் 16,17: வானவர்கள், மனிதர்கள், ஷைத்தான்கள்

Image
ஏக இறைவனின் திருப்பெயரால்                        இந்த தொடரில் நாம் மனித படைப்பின் ஆரம்பம் குறித்தும் அது குறித்து இந்த கட்டுரையாளரின் ( 1,2 )புரிதல் குறித்தும் சிறிது நாம் அறிந்து கொள்வோம். மேலும் இந்த கட்டுரை  அதிக விளக்கம் தேவை படும் கட்டுரையாக இருப்பதால் இதனை முழுவதுமாக குற்றச்சாட்டு பதில் என்று அமைக்காமல் விளக்கம் அளிப்பதாகவும் இதற்கடுத்து இடம் பெறும் கட்டுரையின் அடித்தளமாகவும் அமைக்கவுள்ளேன். ஆக அவர் கூறும் குற்றச்சாட்டுகளை தலைப்பாகயிட்டு சில விளக்கங்கக்ளும் இதில் இடம்பெற வுள்ளது இன்ஷா அல்லாஹ் மனிதனின் படைப்பு:      ஏக இறைவன் அல்லாஹ் மனிதனின் படைப்பு குறித்து தனது திருமறையில் பின்வருமாறு ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறான். பொதுவாக அல்லாஹ் நபிமார்களின் வரலாறுகளை அல்குர்ஆனில் குறிப்பிடுவதற்கு காரணம் மனிதன் இதைகொண்டு படிப்பினை பெறுவதற்கு என்பதை அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.                 அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக

Evolution St(he)ory > Harry Potter Stories - II ஹாரிபாட்டர் கதையை மிஞ்சும் பரிணாமம் தொடர் - 02

Image
  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.  நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் --- குர்ஆன் 2:42 பரிணாமவியல் என்ற ஆதரமற்ற, அறிவியலுக்கு ஒத்துவராத, Hypothesis (Educated Guess) ஆக கூட இருக்க தகுதியில்லாத ஒரு கொள்கை எப்படி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமாய் இருந்தது என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம்.  இன்ஷா அல்லாஹ், இந்த பதிவிலிருந்து, பரிணாமம் என்ற கோட்டை எத்தகைய கற்பனைகளால் கட்டப்பட்டது என்று பார்ப்போம்.  பதிவிற்கு செல்லும் முன் ஒரு சிறு விளக்கம். பரிணாமம் என்பது ஒரு பொதுவான சொல் (Evolution in a broader sense means a merely change).  அது பலவற்றையும் குறிக்கும், eg. galaxies, languages, and political systems etc. ஆனால் பரிணாமம் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது உயிரியல் பரிணாமம் (Biological Evolution) தான். அதாவது, இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்று விளக்க முயற்சிக்கும் உயிரியல் பரிணாமம் தான்.  இப்போது பதி

Evolution St(he)ory > Harry Potter Stories - I ஹாரிபாட்டர் கதையை மிஞ்சும் பரிணாமம் தொடர் - 01

Image
  அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு... உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். நிச்சயமாக இந்த தலைப்பு மிகைப்படுத்தப் பட்டதல்ல... ஆம். பரிணாமவியல் என்ற கதை, ஹாரி பாட்டர் கதைகளையெல்லாம் விட மிகச் சிறந்தது. இந்த தொடரின் ஒவ்வொரு பதிவிலும் அதை உணர்ந்து கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ் .  பரிணாமம் குறித்த இந்த தொடர் பதிவுகளின் நோக்கம், தலைப்பை நியாயப்படுத்துவது தான். "This is one of the worst cases of scientific fraud. It’s shocking to find that somebody one thought was a great scientist was deliberately misleading. It makes me angry" "மோசமான அறிவியல் பித்தலாட்டங்களில் இதுவும் ஒன்று. மிகச் சிறந்த விஞ்ஞானி என்று கருதப்பட்ட ஒருவர் வேண்டுமென்றே இப்படி செய்தது அதிர்ச்சியை தருகிறது. என்னை இது கோபப்பட வைக்கிறது"       இது, "The Times" நாளிதழில் 11th August, 1997ல் ஒரு பிரபல பரிணாமவியலாளர் குறித்து வெளிவந்த செய்தி. பரிணாமத்திற்கு ஆதரவாக அவர் எடுத்து வைத்த ஆதாரம் மிகப் பெரிய பித்தலாட்டம்