Posts

Showing posts from March, 2020

இஸ்லாமிய நிக்காஹ்வின் திருமணக்கொடை (மஹர்) விமர்சனமும் விளக்கமும்

Image
﷽‎               சில காலமாக சில இந்துத்துவா கும்பலும், கிறித்தவ மிசனரிகளும் இஸ்லாமிய திருமணத்தில் வழங்கப்படும் மஹர் குறித்து விமர்சனம் செய்து வருகின்றன. அது பெண்ணின் யோனியை உபயோகிக்க விதிக்கப்படும் தொகை என கூறி அதை விமர்சித்து வருகின்றன. இஸ்லாமிய திருமண முறையில் இடம் பெறும் மஹர் குறித்து பார்ப்பதற்கு முன்பு திருமணம் என்றால் என்ன என்பதையே இவர்களுக்கு விளக்க வேண்டிய அவல நிலை இங்கு ஏற்பட்டுள்ளது என்பதையே இவர்களின் இந்த அறிவீன வாதம் உணர்த்துகிறது. திருமணம் ஏன் ?                  ஒரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது என்ன? மனித வாழ்வில் திருமணம் என்பது சட்டபூர்வமாக பாலியல் இச்சையை தீர்த்து கொள்ளும் ஒரு வடிகால்.அதன் பலனையும் , நஷ்டத்தையும் சட்டபூர்வமாக அனுமதிக்கும் ஒரு முறைதான் திருமணம். இவ்வாறு திருமணம்( அதாவது பாலியல் தேவையை பூர்த்தி செய்வதற்கான அனுமதியை பெற) செய்ய ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு நடைமுறையை கொண்டுள்ளது. சிலர் தாலி கட்டுகிறார்கள், சிலர் மோதிரம் மாற்றுகிறார்கள், சிலர் பதிவு அலுவலகத்தில் பதிந்து நடைமுறையை பின்பற்றி திருமணம் செய்கிறார்கள்.....இஸ்லாமிய மஹர் எனும் முறைமையை கே