Posts

Showing posts from 2018

தொடர் 3: பரிணாமம் : உண்மையா ஊகமா?

Image
அல்லாஹ்வின் திருப்பெயரால்                 நாம் சென்ற தொடரில் டார்வினிஸத்தின் மாற்றான லாமார்க்கிஸம் மற்றும் அதன் மறுப்பையும் கண்டோம். மேலும் டார்வின் தனது இயற்கை தேர்வு குறித்த புரிதலுக்கு மாற்றான பேஞ்ஜெனிஸிஸ் என்ற கருத்தை முன்வைத்தார் என்பதையும், பார்த்தோம். அதன் காரணமாக கலப்பு பாரம்பரியம் (Heriditary Blending) போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இயற்கைத்தேர்விற்கு அன்று விழிபிதுங்கியதால் ஆர்தோஜெனிஸிஸ் என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. அதாவது உதாரணமாக சிகப்பு நிற பூ இருக்கும் தாவரத்திற்கும் வெள்ளை நிற பூ இருக்கும் தாவரத்திற்கும் இடையே இனச்செர்க்கை ஏற்படும் போது டார்வினின் அன்றைய கருத்தியலான பேன்ஜெனிஸிஸ் அடிப்படையில் இனச்சேர்க்கையில் பிங்க் நிற பூ பூக்கும் தவாரம் கிடைக்க வேண்டும் முடிவாக. ஆனால் அதற்கு மாற்றமாக இரண்டாம் தலைமுறை பூக்கள் சில வெண்மையாகவும், சில சிகப்பாகவும் இருக்கிறது. (இது குறித்த தெளிவு பின்னாளில் கிரிகர் மெண்டலினால் தோன்றியது என்பது வேறு விஷயம். அது குறித்து பின்னாள் வரும் தொடர்களில் இன் ஷா அல்லாஹ் கண்போம்.) இது போன்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் இயற்கை த