Posts

Showing posts from February, 2019

தொடர் 5:பரிணாமம் : உண்மையா ஊகமா?

Image
அல்லாஹ்வின் திருப்பெயரால் உயிரினத் தோற்றம்:                                      நாம் சென்ற தொடரில் பரிணாமத்தின் முக்கிய ஆதாரமாய் அமையும் இனப் பிரிகை அல்லது உயிரின தோற்றத்தின் மையமாக அமைந்த இனம் என்றால் என்ன என்பதை விளக்கும் கருத்தியல்களில் இருக்கும் சிக்கல்களையும் அதன் பலவீனங்களையும், அந்த கருத்துக்கள் மத்தியில் இருக்கும் பல முரண்களையும் பட்டியலிட்டு விவாதித்திருந்தோம். நிச்சயமாக அவற்றை எல்லாம் பரிணாமவியல் உலகம் ஒன்றினைக்குமா என்ற கேள்வி நிழலாடி கொண்டிருக்கையில், அறிவியல் உலகில் பரிணாமவியலாளர்கள் நவீன பரிணாமவியலை “உயிரியலை ஒருங்கிணைக்கும் கோட்பாடு (Unifying Theory of Biology” என்று சுயத்தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால் அந்த சுயதம்பட்டத்திற்கு சென்ற தொடரில் விளக்கப்பட்ட இனம் என்ற சொல்லாக்கம் எப்படியெல்லாம் முடிவுரை எழுதுகிறது என்பதை கண்டோம். ஆனால் உன்மையில் பரிணாமம் என்பது அறிவியல் தானா அல்லது அது ஒரு நம்பிக்கை சார்ந்த ஊகமா என்பதை அறிவியலின் அளவு கோலை கொண்டு இனிவரும் தொடர்களில் ஆய்வு செய்வோம். இனப்பிரிகையை பரிணாமவியலால் விளக்க முடிகிறதா, அதன் இயங்கியல்கள் அதை தோற்றுவிக்கும