Posts

Showing posts from November, 2016

எதிர் தொடர் 21: சில கேள்விகளும் பதில்களும்

Image
ஏக இறைவனின் திருப்பெயரால்       நமது எதிர்  கட்டுரையாளரின் வாதங்கள்  அனைத்தும் ஒரே மையத்தை சுற்றியேதான் அமைந்துள்ளது. அதாவது ஈஸா(அலை) அவர்களின் விண்ணேற்றத்திற்கு பிறகு கிறித்தவர்கள் யூதர்கள் என்ற இரு பிரிவினர் மட்டுமே இருந்தாக எண்ணிய அனுமானம்தான் அது. பவுலின் முக்கடவுள் கொள்கையை ஏற்றவர்கள் அந்தியோக்காவில் தான் முதன் முதலில் கிறித்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்று இன்றிருக்கும் பைபிலே சான்று பகர்கிறது. அந்தியோக்காவிற்கு முன்னர் இருந்த சீடர்கள்தான் உண்மை முஸ்லீம்கள்.  இவ்வாறு ஏக இறைவனை ஏற்ற ஈஸா(அலை) அவர்களை உண்மை நபியாக ஏற்று ஈஸா (அலை) அவர்களது சிலுவை மரணத்தை மறுத்து விண்ணேற்றத்தை ஏற்ற, மக்கள் நபி(சல்) அவர்கள் காலம் வரை வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் உடைந்த சிலுவையின் பல பகுதிகளில் விளக்கியுள்ளோம்...... எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண

எதிர்தொடர் 20: நசாராக்களின் கொள்கையை இஸ்லாம் போதிக்கிறதா?????.......

Image
ஏக இறைவனின் திருப்பெயரால்       சிலுவை மரணம் என்ற தொடரில் கட்டுரையாளர் சில கருத்துகளை முன்வைத்து இஸ்லாம் கூறும் ஈஸா(அலை) அவர்களது விண்ணேற்றம் குறித்த கருத்தை விமர்சிக்கிறார். அவர் தான வைக்கும் விமர்சனத்திற்கு ஆதாரமாக பார்னபாஸின் சுவிசேசத்தினை ஆதாரமாக கொண்டும், சில குர்ஆன் விரிவுரைகளையும் அடிப்படையாக கொண்டு தனது வாதத்தை முன்வைக்கிறார். விரிவுரைகளில் காணப்படும் சிலுவை மரணம் தொடர்பான விளக்கங்கள் அனைத்தும் அக்கால கிறித்தவர்களின் ஏடுகளில் இருந்து கூறப்பட்டவைதான். அதற்கும் நபி(ஸல்) அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆக பார்ன்பாஸ் சுவிஷேசம் குறித்து நாம விளக்க வேண்டிய தேவை இல்லை. ஆயினும் சில கருத்துகளை நாம் ஆய்வு செய்வதினால் இந்த கட்டுரையாளரின் அறியாமையையும், இஸ்லாம் மீது சுமத்தும் அவதூறுகளை தோழுரிக்கவியலும். யூதாஸ்தான் ஈஸா(அலை) அவர்களுக்கு ஒப்பாக்கப்பட்டாரா?       பார்னபாஸின் சுவிஷேசம் இந்த கருத்தை முன்வைப்பதாகவும் அது 15ம் நூற்றாண்டின் மோசடி என்றும் கூறுகிறார். மேலும் முஸ்லீம்கள் அனைவரும் இந்த சுவிஷேசத்தை ஏற்று கொள்வதாகவும் கூறுகிறார். உண்மையை கூறுவது என்றால் சிலுவை மரணம்

எதிர் தொடர் 19: சில சந்தேகங்களும் பதில்களும்

Image
ஏக இறைவனின் திருபெயரால்      சென்ற தொடர்களில் கிறித்தவம் குறித்து ஒரு சிறிய ஆய்வை கண்டோம். நாம் இந்த தொடரில் நமது கட்டுரையாளர் வைக்கும் சில கேள்விகளும் அதற்கான பதிலையும் காண்போம். கேள்வி 1: முதலாம் நூற்றாண்டு முஸ்லீம்கள் யார்?   நமது பதில்:       இந்த கட்டுரையாளர் தான் எழுதிய கட்டுரையிலேயே இதற்கான விடையை கூறியுமுள்ளார். ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒரே எண்ண ஒட்டமானது கட்டுரையாளரின் கண்களை மறைத்து விட்ட்து என்றுதான கூற வேண்டும். குர்ஆன் ஈசா(அலை) காலத்து முஸ்லிம்கள் குறித்து கூறும் வசனங்களை கட்டுரையாளர் பதிந்துள்ளார். அல்லாஹ் தான் ஈசா (அலை) மூலமாக விதித்த கட்டளையை ஏற்று கொண்டவர்களை முஸ்லீம் என்கிறான். அவ்வளவுதான். குர் ஆன் பின் வருமாறு கூறுகிறது:                 " என்னையும் , என் தூதரையும் நம்புங்கள்! ' என்று (ஈஸாவின்) சீடர்களுக்கு நான் அறிவித்த போது "நம்பிக்கை கொண்டோம்! நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்விற்கு கட்டுபட்டவர்கள்) என்பதற்கு நீயே சாட்சியாக இருப்பாயாக! '' என அவர்கள் கூறினர் .(அல் குர் ஆன் 5:111) .       அல்லாஹ் கூறுவத