Posts

Showing posts from August, 2022

அல் ஃபாத்திஹா மற்றும் அல் முஅவ்விததைன் சூராக்கள் குர்ஆனின் பகுதிகளா?

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ           குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களுக்கு தொடர்ச்சியாக இந்த தொடரின் ஊடாக பதிலளிக்கப்பட்டுவருகிறது. அந்த வரிசையில் அடுத்தாக இடம் பெறும் பகுதி இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் இன்றிருக்கும் குர்ஆனின் சில சூராக்களை குர்ஆனின் பகுதியாக ஏற்கவில்லை என்பதாகும். அது குறித்த இஸ்லாமோஃபோபுகளின் வாதத்தையும், அதற்கு அடிப்படையாக அமைந்த ஆதாரங்களையும் அதன் விளக்கத்தையும் பார்ப்போம். இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரங்களும் வாதங்களும் முன்வைக்கபடும் ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் குறித்த விளக்கம் அபூ இஸ்ஹாக் அவர்களது ஹதீஸ்களில் ஏற்கப்பட்டவையும் ஏற்கப்படாதவையும் அஸீம் இப்னு பஹ்தலாஅவர்களது ஹதீஸ்களில் ஏற்கப்பட்டவையும் ஏற்கப்படாதவையும் இருவரின் கிராத்களின் அடிப்படையில் ஏற்கப்படும் ஹதீஸ்கள் அல் ஃபாத்திஹா சூராவை இப்னு மஸ்வூத்(ரலி) மறுத்தார்களா? முன்வைக்கப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இருக்கும் குறைபாடு இப்னு மஸ்வூத்(ரலி) மீதான இந்த கருத்தை மறுத்த நபித்தோழர்களும் அவரது மாணவரும் அறிஞர்களின் கருத்து இப்னு ஹஸ்ம் அவர்களது கருத்து அந்நவவீ

இப்னு மஸ்வூத்(ரலி)யும் அவர்களது ஓதலும்

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ           குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களில் அடுத்ததாக முக்கிய இடத்தை வகிப்பது நபித்தோழர் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை அடிப்படையாக கொண்டதாகும். அதாவது நபி(ஸல்) அவர்களால் குர்ஆன் ஓதிக்கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நபித்தோழராகிய இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை ஓரம் கட்டிவிட்டு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை குர்ஆன் தொகுப்பு குழுவில் நியமித்தது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை ஓரம் கட்டி தங்களது இச்சைபடியான குர்ஆனை உருவாக்கவே என்பது அவர்களது வாதம். அதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும், அதன் ஊடாக அவர்கள் எழுப்பும் வாதத்தையும் பார்த்துவிட்டு அதற்கான நமது விளக்கத்தையும் பார்ப்போம் இன் ஷா அல்லாஹ். இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரங்களும் வாதங்களும் இப்னு மஸ்வூத்(ரலி) குறித்த நபி(சல்) அவர்களது அறிவிப்பும் விளக்கமும்: ஸைத்(ரலி) சிறுவனாக இருந்த போதே 70 சூராக்களை கற்ற இப்னு மஸ்வூத்(ரலி) பல தருணங்களில் 70 சூராக்களை நேரடியாக கற்றதாக சிலாகித்து கூறும் இப்னு மஸ்வூத்(ரலி) இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது ஓதல்தான் இறுதி ஓதலா???-ஆதாரங்களின் தரம் இப்னு