Posts

Showing posts from March, 2016

புற்று நோய் மிகக் குறைவாக இருந்த நாட்டில் 4000 மடங்கு அதிகரிப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட்! ஹிரோஷிமாவை விட அதிகம் பாதிப்பு!!

Image
புற்று நோய் மிகக் குறைவாக இருந்த நாட்டில் 4000 மடங்கு அதிகரிப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட்! ஹிரோஷிமாவை விட அதிகம் பாதிப்பு!! அமெரிக்கா இராக்கின் மேல் குண்டு வீசுவதை இப்போது நிறுத்தி இருக்கலாம் ஆனால் குண்டு வீச்சினால் ஏற்பட்ட பாதிப்புகள் இராக்கில் உள்ள மனித உடல்களை பல தலைமுறைகளுக்கு பாதிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. பிறக்கும் குழந்தைகளின் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், அதிசியமான வியாதிகள், மேலும் எண்ணிலடங்கா புற்று நோய் பாதிப்புகள் என அந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆயுதங்களால் ஏற்பட்ட சுற்றுப்புற சூழல் பாதிப்பு, குறிப்பாக யுரானிய வெடிமருந்துகளால் ஏற்பட்ட தாக்கம் தான் இராக் மக்களை மிகவும் கடுமையாக பாதித்து வருகின்றது. இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தைகள், ஒரு கண்ணுடன் பிறந்த குழந்தைகள், முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் பிறக்கும் குழந்தைகள் என மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள் பிறப்பதற்கான காரணம் இந்த ஆயுந்தங்களினால் ஏற்பட்ட தாக்கம் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று, 15 சதவீத பலூஜா குழந்தைகள்