Posts

Showing posts from August, 2020

உடைந்த சிலுவை பாகம் 15- மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்

Image
بِسْمِ   اللَّهِ   الرَّحْمَنِ   الرَّحِيمِ        நாம் சென்ற தொடரில் கிறித்தவர்கள் கொண்டாடும் பழைய ஏற்பாடு எப்படி கிபி 11ம் நூற்றாண்டுவரை யூதர்களால் திருத்தப்பட்டு கரைபடிந்துள்ளது என்பதையும், LXX குறித்த கிறித்தவ வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் தேவாலயபிதாக்களின் முரண்பட்ட உளரல்களையும் கண்டோம். இதுதான் இவர்களது வேதாகமத்தின் ஒரு பகுதியான பழைய ஏற்பாட்டின் மூல கையெழுத்து பிரதிகளின் நிலை என்பதையும் படம் பிடித்து காட்டி இருந்தோம்.        இப்போது கிறித்தவர்கள் கொண்டாடும் வேதாகமத்தின் மறு பகுதியான புதிய ஏற்பாட்டிற்கு ஒவ்வொரு நூற்றாண்டிலும் எத்துனை துண்டு மூல பிரதி உள்ளது என்பதை பார்க்க போகிறோம். இந்த ஆய்வின் பெரும் பகுதி Kurt Aland and Barbara Aland ஆகியோரால் எழுதப்பட்ட THE TEXT of the NEW TESTAMENT : An Introduction to the Critical Editions and to the Theory and Practice of Modern Textual Criticism நூலின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல புதிய ஏற்பாட்டின் பணடைய கையெழுத்து பிரதிகளை கண்டறிந்து அதில் இருக்கும் விசயங்களையும் தங்களது மேற்குறிபிட்ட நூலின் மூலம் உலகின் வெளிச்சத்திற