Posts

Showing posts from April, 2021

அல் பராஅத் சூராவிற்கு நிகரான சூரா குர்ஆனில் காணவில்லையா?

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ          குர்ஆனின் கிராத்கள் குறித்தும் அது எப்படி நபி(சல்) அவர்களிடம் தொடர்புடையது என்பதையம் சென்ற தொடரில் கண்டோம். குர் ஆனின் கிராத் பாதுகாப்பு குறித்து நாம் விளக்கும் போது சில ஹதீஸ்களில் காணப்படும் மாறுபட்ட அல்லது இன்றில்லாத ஓதல் முறை குறித்து இன்றைய இஸ்லாமோஃபோபுகள் கேள்வி எழுப்பி இதனால் குர்ஆனின் ஓதல் பாதுகாக்கப்படவில்லை என்று உளறித்திரிகின்றனர். அவர்களது விமர்சனங்களில் காணப்படும் சில ஹதீஸ்களையும் அதன் மூலம் அவர்கள் முன்வைக்கும் விமர்சங்களையும், அதற்கான விளக்கத்தையும் காண்போம். இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும் அல் பராத் சூராவிற்கு நிகரான சூரா மறக்கடிக்கப்பட்டுவிட்டது என்பதின் பொருள் முஸப்பிஹாத் என்ற இறைதுதியில் ஆரம்பிக்கும் சூராவிற்கு நிகரான ஒரு அத்தியாயம் அபூ மூஸா (ரலி) அவர்களது ஓதலை உறுதிபடுத்தும் ஏனைய கிராத்கள் இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும்: அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:           அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் பஸ்ரா (இராக்) நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். (