Posts

Showing posts from May, 2022

பால்குடி வசனம் குர்ஆனில் காணவில்லையா???

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ           குர்ஆனின் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களில் அடுத்தாக இஸ்லாமோஃபோபுகள் முன்வைப்பது ஐந்து முறை பால் அருந்துவதால் தாய் சேய் உறவு ஏற்படும் என்ற வசனம் குர்ஆனில் காணவில்லை என்பதாகும். இது சென்ற கட்டுரையின் தொடர்ச்சி எனவும் கூறலாம். இந்த விமர்சனத்திற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும் அதன் விளக்கத்தையும் காண்போம் இன் ஷா அல்லாஹ். இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரங்களும் வாதங்களும் ஆதாரங்களின் - தெளிவான அரபி மொழியியல் பொருள் விளக்கம் மொழியல் பொருள் விளக்கத்தை உறுதி படுத்தும் ஹதீஸ்கள் பால்குடி தொடர்பான வசனம் எழுதப்பட்டிருந்த காகிதத்தை ஆடு தின்றுவிட்டதா? ஆதாரம் 1: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2876,முவத்தா மாலிக் பாடம் 30/