Posts

Showing posts from May, 2021

அபூதர்தா(ரலி) அல் லைல் சூராவை (அல் குர்ஆன் 92:3) மாற்றி ஓதினார்களா???

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ             குர்ஆனின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்படும் குற்றச்சாட்டில் அடுத்து இடம் பெறுவது அபூதர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கும் அல் குர்ஆன் 92 வது அத்தியாயம் குறித்த ஹதீஸ் ஆகும். இந்த செய்தி பல கிரந்ததங்களில் அபூதர்தா(ரலி) அவர்களிடம் இருந்து அல்கமா(ரஹ்) அவர்கள் வழியாக ஒற்றை அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி புகாரியில் 4944 ஆவது செய்தியாக இடம் பெறுகிறது. இன் ஷா அல்லாஹ் அதன் விளக்கத்தை காண்போம். இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும் ஒற்றை அறிவிப்பாளர் தொடர் ஹதீஸ்கள் தவத்தூர் அறிவிப்பை மறுக்குமா குர்துபீ அவர்களது தஃப்ஸீரில் அபூபக்கர் அல்அன்பாரி அவர்களது கருத்து ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களது விளக்கம் அபூதர்தா(ரலி) அவர்களது ஈராக்வாசிகளின் ஓதலில் அல் லைல் சூரா   இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார்     அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்து அபுத்தர்தா(ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா(ரலி) தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள்.        பிறகு,

ஆதரவற்ற குழந்தைகளின் பராமரிப்பில் மிகுந்த கவனம் தேவை!!

Image
யுனிசெப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 10,000 குழந்தைகள் அனாதைகளாகிறார்கள். சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, உலகில் குறைந்தது 140 மில்லியன் அனாதைகள் உள்ளனர். ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதில் இஸ்லாம் சொல்லும் வழிமுறையை விட வேறு சிறந்த ஒன்றை இன்று வரை கூட எந்த சட்டமும் சொல்வதில்லை. "நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்" [4:2] "நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்." [4:10] "அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; " [6:152] "(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால