Posts

Showing posts from 2022

அல்குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று ஹதீஸ்கள் கூறுகிறதா??

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ      குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் கேள்விகளுக்கு தொடர்களாக நாம் பதிலளித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் குர்ஆனின் பகுதிகள் காணவில்லை என்று கூறும் சில ஹதீஸ்களை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் விமர்சனங்களையும் அதற்கான விளக்கங்களையும் வரிசைப்படுத்தி காணவுள்ளோம் இன்ஷா அல்லாஹ். உஸ்மான்(ரலி) அவர்கள் அல் அஹ்ஸாப் சூராவை முழுமையாக பெறவில்லையா?? குர் ஆனில் இரு வசனங்கள் விடுபட்டுவிட்டதா?? கல்லெறி தன்டனை குறித்த ஆயத்தை கொண்டுவந்த உமர்(ரலி)யை,  ஸைத் இப்னு ஸாபித்(ரலி) மறுத்துவிட்டார்களா? உஸ்மான்(ரலி) முஸ்ஹஃப்பை மாற்றுவதற்கு முன்பிருந்த வசனம் பிறகு காணவில்லையா?? "நீங்கள் முதலில் போராடியது போல் போராடுங்கள்" என்ற வசனம் விடப்பட்டுவிட்டதா?? உஸ்மான்(ரலி) அவர்கள் அல் அஹ்ஸாப் சூராவை முழுமையாக பெறவில்லையா??   ﻭﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﺮﻳﻢ ﻋﻦ اﺑﻦ ﻟﻬﻴﻌﺔ ﻋﻦ ﺃﺑﻲ اﻷﺳﻮﺩ ﻋﻦ ﻋﺮﻭﺓ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﻗﺎﻟﺖ ﻛﺎﻧﺖ ﺳﻮﺭﺓ اﻷﺣﺰاﺏ ﺗﻘﺮﺃ ﻓﻲ ﺯﻣﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﺎﺋﺘﻲ ﺁﻳﺔ ﻓﻠﻤﺎ ﻛﺘﺐ ﻋﺜﻤﺎﻥ اﻟﻤﺼﺎﺣﻒ ﻟﻢ ﻳﻘﺪﺭ ﻣﻨﻪا ﺇﻻ ﻋﻠﻰ ﻣﺎ ﻫﻮ اﻵﻥ. ஆயிஷா(ரலி) க

இப்னு உமர்(ரலி) குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று கூறினார்களா??

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ      குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் விமர்சனங்களில் அடுத்ததாக நாம் காணயிருப்பது இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றை அடிப்படியாக கொண்டது. அவர்கள் அதற்கு முன்வைக்கும் ஆதாரத்தையும் அதன் அடிப்படையில் எழுப்பப்படும் விமர்சனத்தை முதலில் பார்ப்போம்.   இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும் ஆதாரம் 1 ஆதாரம் 2 நமது பதில்: மொழியாக்க பித்தலாட்டம் சரியான மொழியாக்கம் தஹப - என்ற சொல்லின் பொருள் வேறு நூற்களில் இடம்பெறும் இப்னு உமர்(ரலி) அவர்களது அறிவிப்புகள் எந்த தலைப்பின் கீழ் இந்த ஆதாரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன கஸீர் என்ற சொல்லின் பொருள் ஹதீஸின் சரியான மொழியாக்கம இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும் ஆதாரம் 1 : `Abdullah b. `Umar reportedly said, 'Let none of you say, "I have got the whole of the Qur'an." How does he know what all of it is? MUCH OF THE QUR'AN HAS GONE. Let him say instead, "I have got what has survived."' (Jalal al Din `Abdul Rahman b. Abi Bakr al Suyuti,al-Itqan fi `ulum a

யமாமா யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டதா???

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ                     குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் விமர்சனங்களில் அடுத்ததாக நாம் காணயிருப்பது யமாமா யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்பதாகும். யமாமா யுத்தமானது ஹிஜ்ரி 11-12ல் , தன்னைதானே இறைத்தூதர் என்று அறிவித்து இஸ்லாமிய அரசிற்கு எதிராக பனு ஹனிஃபா கிளையாரின் இனவெறியை தூண்டி , போர்பிரகடனம் செய்த முஸைலாமா என்ற பொய்யனுக்கு எதிராக நடைபெற்றதாகும். இந்த போரில் குர்ஆனை மனனமிட்ட பல ஹாஃபிழ்கள் கொல்லப்பட்டனர்.            இந்த விஷயத்தை கையில் எடுத்த இஸ்லாமோஃபோபுகள் "இந்த யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டன.எனவே இன்றைய குர்ஆனில் அந்த பகுதிகள் இல்லை. எனவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை" என்று விமர்சனம் செய்துவருகின்றனர். அதற்கு இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரங்களையும், அவர்களது வாதங்களையும் அதற்கு உரிய தக்க பதில்களையும் காண்போம் இன் ஷா அல்லாஹ். ஆதாரம் 1:450 குர்ஆன் காரிகள்(குர்ஆனை மனனமிட்டவர்கள்) கொல்லப்பட்டார்கள் என்று இப்னு கதீர் கூறினார்களா?? இப்னு கதீர் அவர்களது கூற்றில் தில்லு முல்லு

உபை இப்னு கஅப்(ரலி) முஸ்ஹஃப்பில் அல்ஹஃப்த் மற்றும் அல்ஃஹலா ஸுராக்கள்

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ                குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களின் வரிசையில் அடுத்தாக இடம் பெறும் பகுதி உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் அதிகப்படியான இரண்டு சூராக்களை குர்ஆனின் பகுதியாக கொண்டிருந்தார்கள், அது இன்றைய குர்ஆனில் இடம்பெறவில்லை என்பதாகும். அது குறித்த இஸ்லாமோஃபோபுகளின் வாதத்தையும், அதற்கு அடிப்படையாக அமைந்த ஆதாரங்களையும் அதற்கான பதிலையும்  பார்ப்போம். இஸ்லாமோஃபோபுகளின் ஆதாரங்களும் விமர்சனங்களும் நமது பதில்   உபை இப்னு கஅப்(ரலி)அவர்களது முஸ்ஹஃப் உஸ்மான்(ரலி) அவர்களிடம் ஹிஜ்ரி 30ல் ஒப்படைக்கப்படுதல் உபை இப்னு கஅப்(ரலி)அவர்களது முஸ்ஹஃப் என்று ஹி30க்கு பிறகு கூறப்படுபவற்றில் காணப்பட்ட முரண்பட்ட வசனங்கள் ஆய்வினால் பெறப்படும் இறுதி முடிவுகள்   ஆதாரம்: عَنِ ابْن سِيرِينَ، قَالَ: كَتَبَ أُبَيُّ بْنُ كَعْبٍ فِي مُصْحَفِهِ فَاتِحَةَ الْكِتَابِ وَالْمُعَوِّذَتَيْنِ، وَاللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ، وَاللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ இப்னு ஸீரின் கூறியதாவது,  "உபை இப்னு கஅப்(ரலி) அவரது முஸ்ஹஃபில் அல் ஃபாத்திஹா, அல் முஅவ்விததைன்

உபை இப்னு கஅப்(ரலி)யும் அவர்களது ஓதலும்

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ   குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களில் அடுத்ததாக முக்கிய இடத்தை வகிப்பது நபித்தோழர் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலை அடிப்படையாக கொண்டதாகும். அதாவது நபி(ஸல்) அவர்களால் குர்ஆன் ஓதிக்கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நபித்தோழராகிய உபை இப்னு கஅப்(ரலி) அவர்களின் ஓதலில் உமர்(ரலி) அவர்கள் சில பகுதிகளை விட்டு விட்டதாக கூறுகிறார்கள். என்வே உபை இப்னு கஅப்(ரலி) அல்லாத நபித்தோழர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட குர்ஆன்தான் இன்றிருப்பது என்பது இஸ்லாமோஃபோபுகளின் வாதம். அதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும், அதன் ஊடாக அவர்கள் எழுப்பும் வாதத்தையும் பார்த்துவிட்டு அதற்கான நமது விளக்கத்தையும் பார்ப்போம் இன் ஷா அல்லாஹ். இஸ்லாமோஃபோபுகளின் ஆதாரங்களும் விமர்சனங்களும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் இருந்து குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்ற நபி(ஸல்) அவர்களது கூற்று- விளக்கம் உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே முழு குர்ஆனையும் கற்றிருந்தார்கள்- விளக்கம் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை உஸ்மான்(ரலி) அவர்கள் குர்ஆன் தொகு