Posts

Showing posts from January, 2019

தொடர் 4:பரிணாமம் : உண்மையா ஊகமா?

Image
அல்லாஹ்வின் திருப்பெயரால்              பரிணாமவியலின் முக்கிய ஆவணம் அல்லது ஆதாரம் என்று அழைக்கப்படும் ஒரு இயங்கியல்(Process) இனப்பிரிகையாகும்(SPECIATION). இதன் வேர் சொல் அல்லது அடிப்படை இனம்(SPECIES) ஆகும்.    ஆம் பரிணாமவிலாளர்களின் இறுதி இலக்கான “ இனமாக பிரிதல்(speciation) என்னும் இயங்கியல் குறித்தும் அதன் மையமாக அமைந்த இனம்(species) என்ற பதம் குறித்தும் , உயிரியல் வகைபடுத்தலில் அடிப்படை அளகான அந்த இனம் என்ற சொல்லை வரையறுப்பத்திலும் அறிவியல் உலகம் பல்வேறு முரண்பட்ட விளக்கங்களை கூறி தத்தளித்து வருவதை காண்கையில் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆக எது இலக்கு என தெரியாமலேயே ஒரு அறிவியல் தியரி?? பயணிக்கிறது என்றால் அது பரிணாமவியலாகத்தான் இருக்கும் என்பதில் நமக்கு எல்லளவும் சந்தேகேம் இல்லை. அதாவது ஒரு இனம்(species) "பல இனங்கள்”(Multiple Species)ஐ தோற்றுவிக்கிறது. பல இனங்கள் பேரினத்தை தோற்றுவிக்கிறது என்பது டார்வினின் கூற்று.(1) ஆக இனம் என்பது பரிணாமத்தின் தயாரிப்பு என்பது டார்வினின் கூற்று. ஆனால் அந்த தயாரிப்பு எது என்பதிலேயே குழப்பம் நிலவுகிறது என்பது நகைப்புக்குறியது. அ