Posts

Showing posts from December, 2020

ஏழு அஹ்ரூஃபும் ஏழு கிராத்தும்

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ       குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் வைக்கும் அறைவேக்காட்டு வாதங்களுக்கு , ஆதாரப்பூர்வமான வரலாற்று தரவுகளை முன்வைத்து விரிவான பதில்களை கண்டுவருகிறோம். அல்ஹம்துலில்லாஹ். இந்த வரிசையில் குர்ஆன் வரலாறு குறித்த விமர்சனங்களில் ஏழு அஹ்ரூஃப் குறித்த இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கான விளக்கம் எளிமையாக புரிந்து கொள்ளும் படியாக இருந்தாலும், முன் சென்ற அறிஞர்களின் ஆய்வை முன்னிறுத்தி சில வாதங்களை கிறித்துவ மிசனரிகளும், Ex- முஸ்லிம் என்று கூறித்திரிவோரும் முன்வைத்து வருகின்றனர். அதற்கான பதிலை இந்த பாகத்தில் காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதங்களை முதலில் பார்ப்போம். இஸ்லாமோஃபோபுகளின் குருட்டு வாதமும் அதன் நோக்கமும் ஏழு அஹ்ரூஃப் குறித்த கருத்துக்கள் ஏழு அஹ்ரூஃபில் இறங்கிய அல்குர்ஆன் அஹ்ரூஃப் என்பதின் பொருள் அஹ்ரூஃப் என்றால் வட்டார வழக்கா??? ஏழு அஹ்ரூஃப் என்பது இலக்கண மாறுபாடுகள் மட்டுமா???? அஹ்ரூஃபின் - மாறுபட்ட முறை என்ற பொருளே அதன் விளக்கம் அஹ்ரூஃபும் கிராத்தும் குர்ஆனில் 10243 மாற