Posts

Showing posts from 2021

அல் குர்ஆனில் எழுத்தர் பிழைகளா?

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ        நாம் சென்ற தொடரில் நபித்தோழர்கள் எப்படி அல்குர்ஆனின் ஆயத்துக்களுடன் அதன் பொருளாக்கத்தையும் இணைத்து ஓதுவார்கள் என்பதை இஸ்லாமோஃபோபுகளின் விளங்காத விமர்சனத்தின் வாயிலாகவே விளக்கி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த தொடரில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது அறிவிப்பு ஒன்றை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் இந்த செய்தி எப்படி முன் சென்ற தொடரிற்கு மேலதிக விளக்கமாகவும் சான்றாகவும் உள்ளது என்பதை காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். முதலில் அவர்கள் முன்வைக்கும் ஆதாரத்தையும் அதில் இருந்து அவர்கள் வைக்கும் விமர்சனத்தையும் காண்போம். அந்நூர் அத்தியாத்தின் 27 ம் வசனத்தில் எழுத்தர் பிழை இப்னு அப்பாஸ்(ரலி) கூற்று - ஆதாரமும் வாதமும் நபித்தோழர்கள் குர்ஆன் வசனத்துடன் விளக்கத்தியும் ஓதும் வழக்கமுடையவர்கள்- ஆய்வாளர்களின் கருத்து தஸ்தஃனிஸூ என்பதின் பொருள் தஸ்தஃதனூ- இப்னு அப்பாஸ்(ரலி) விளக்கம் இப்னு அப்பாஸ்(ரலி)யின் ஒதலை கற்றுக்கொடுத்த முஜாஹித்(ரஹ்) அவர்கள் இன்றிருப்பது போல் ஓதுதல் இப்னு அப்பாஸ்(ரலி) --> முஜாஹித்(ரஹ்) மற்றும் ஸயீத் இப்னு ஜுபைர்-->அல் தூரியின் ஓதல் ஆ

நபித்தோழர்கள் இன்றைய குர்ஆனிற்கு மாற்றமாக ஓதினார்களா??

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ        குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் கேள்விகளுக்கு தொடர்களாக நாம் பதிலளித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் குர்ஆனில் இடம் பெறும் வசனங்கள் சில ஹதீஸ்களில் கூறப்பட்ட அதே வசனங்களுக்கு மாறுபட்டு சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறி, அதனால் அல்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களுக்கு பதிலை காணவுள்ளோம், இன் ஷா அல்லாஹ். இஸ்லாமோஃபோபுகளின் முன்வைக்கும் ஆதாரங்களும் விமர்சனங்களும் அரபு மொழியில் விளக்கமளிக்கும் சொற்றொடர்கள் அபூ ஜாஃபர் அந்நகாஸ் (மரணம் ஹிஜ்ரி 338) அவர்களது கருத்து அபூ பகர் அல் பாக்கீலானி (ஹிஜ்ரி 340 - 403) அவர்களது கருத்து அபூ ஹய்யான் (ஹிஜ்ரி 654 – 745) அவர்களது கருத்து இப்னு அல் ஜஸரீ (ஹிஜ்ரி 751- 833) அவர்களது கருத்து அல்லாஹ் வழங்கிய வேதமும் ஞானமும் இந்த வரிசையிலான சில ஹதீஸ்களை இங்கு காண்போம் 1. ஸஹீஹுல் புகாரி 4971, முஸ்லீம் 355 حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاس

அபூதர்தா(ரலி) அல் லைல் சூராவை (அல் குர்ஆன் 92:3) மாற்றி ஓதினார்களா???

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ             குர்ஆனின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்படும் குற்றச்சாட்டில் அடுத்து இடம் பெறுவது அபூதர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கும் அல் குர்ஆன் 92 வது அத்தியாயம் குறித்த ஹதீஸ் ஆகும். இந்த செய்தி பல கிரந்ததங்களில் அபூதர்தா(ரலி) அவர்களிடம் இருந்து அல்கமா(ரஹ்) அவர்கள் வழியாக ஒற்றை அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி புகாரியில் 4944 ஆவது செய்தியாக இடம் பெறுகிறது. இன் ஷா அல்லாஹ் அதன் விளக்கத்தை காண்போம். இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும் ஒற்றை அறிவிப்பாளர் தொடர் ஹதீஸ்கள் தவத்தூர் அறிவிப்பை மறுக்குமா குர்துபீ அவர்களது தஃப்ஸீரில் அபூபக்கர் அல்அன்பாரி அவர்களது கருத்து ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களது விளக்கம் அபூதர்தா(ரலி) அவர்களது ஈராக்வாசிகளின் ஓதலில் அல் லைல் சூரா   இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார்     அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்து அபுத்தர்தா(ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா(ரலி) தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள்.        பிறகு,

ஆதரவற்ற குழந்தைகளின் பராமரிப்பில் மிகுந்த கவனம் தேவை!!

Image
யுனிசெப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 10,000 குழந்தைகள் அனாதைகளாகிறார்கள். சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, உலகில் குறைந்தது 140 மில்லியன் அனாதைகள் உள்ளனர். ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதில் இஸ்லாம் சொல்லும் வழிமுறையை விட வேறு சிறந்த ஒன்றை இன்று வரை கூட எந்த சட்டமும் சொல்வதில்லை. "நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்" [4:2] "நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்." [4:10] "அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; " [6:152] "(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால

அல் பராஅத் சூராவிற்கு நிகரான சூரா குர்ஆனில் காணவில்லையா?

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ          குர்ஆனின் கிராத்கள் குறித்தும் அது எப்படி நபி(சல்) அவர்களிடம் தொடர்புடையது என்பதையம் சென்ற தொடரில் கண்டோம். குர் ஆனின் கிராத் பாதுகாப்பு குறித்து நாம் விளக்கும் போது சில ஹதீஸ்களில் காணப்படும் மாறுபட்ட அல்லது இன்றில்லாத ஓதல் முறை குறித்து இன்றைய இஸ்லாமோஃபோபுகள் கேள்வி எழுப்பி இதனால் குர்ஆனின் ஓதல் பாதுகாக்கப்படவில்லை என்று உளறித்திரிகின்றனர். அவர்களது விமர்சனங்களில் காணப்படும் சில ஹதீஸ்களையும் அதன் மூலம் அவர்கள் முன்வைக்கும் விமர்சங்களையும், அதற்கான விளக்கத்தையும் காண்போம். இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும் அல் பராத் சூராவிற்கு நிகரான சூரா மறக்கடிக்கப்பட்டுவிட்டது என்பதின் பொருள் முஸப்பிஹாத் என்ற இறைதுதியில் ஆரம்பிக்கும் சூராவிற்கு நிகரான ஒரு அத்தியாயம் அபூ மூஸா (ரலி) அவர்களது ஓதலை உறுதிபடுத்தும் ஏனைய கிராத்கள் இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும்: அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:           அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் பஸ்ரா (இராக்) நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். (

நபி(சல்) அவர்களிடமிருந்து வந்த கிராத்கள்

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ        நாம் சென்ற தொடரில் ஏழு அஃரூஃபும் இன்றிருக்கும் கிராத்களும் தொடர்புடையவை என்பதை விளக்கியிருந்தோம். கிராத்கள் என்பது நபி(சல்) அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட மாறுபாட்டுடன் குர்ஆனை ஓதுவதாகும். இந்த கிராத்கள் ஒவ்வொன்றும் நபி(சல்) அவர்களிடம், வெகுஜன ஓதலினால் ஒவ்வொரு தலைமுறைகளிலும் கடத்தப்பட்டு இறுதியாக இன்று நம்மிடம் வந்தடைந்திருக்கிறது. அதன் அறிவிப்பாளர் தொடர் குறித்து சிறிய விளக்கத்தை இங்கு காண்போம் இன் ஷா அல்லாஹ். வெகுஜன ஓதல் ஹஃப்ஸ் கிராத், வர்ஸ் கிராத் என்று அழைக்கப்படுவதின் நோக்கம் பெரும்பான்மை மக்களின் கிராத் ஓர் பார்வை கிராத் ஹஃப்ஸ் அன் ஆஸிம்: (கிராத் அல் ஆம்மா) ஹஃப்ஸ் குறித்த விமர்சனமும் விளக்கமும் கிராத் வர்ஸ் அன் நாஃபீ மற்றும் காலுன் அன் நாஃபீ கிராத் அல் தூரி அன் அபூ அம்ரூ கிராத் அன் இப்னு ஆமிர் கிராத்களின் பரவல் ஆட்ரியன் புரோகெட் என்ற ஆங்கில அறிஞரின் கூற்று: ஒன்றை ஒன்று பாதுகாக்கும் எழுத்து வடிவமும் வாய்வழி வடிவமும் ஹதீஸ்களில் காணப்படும் நபிதோழர்களின் மாறுபட்ட ஓதல்கள்- சிறு விளக்கம் வெகுஜன ஓதல் கேட்டலால் கடத்தப்பட்டால் ஏன் ஹஃப்ஸ் கிராத்,