Posts

Showing posts from June, 2020

இஸ்லாம் கூறும் திருமண வயது

Image
                நாம் சென்ற மூன்று தொடர்களாக ஏணைய மதங்கள் கூறும் திருமண வயது குறித்து கண்டோம். கிறித்தவ யூத மதங்கள் திருமண வயது குறித்து எந்த தெளிவான அறநெறிகளியும் வகுக்கவில்லை, அதனால் யூத கிறித்தவ வரலாற்றில் மூன்று வயதில் இருந்து திருமணம் செய்வித்தற்கான போதிய ஆதாரங்கள் சென்ற தொடர்களில் பதிந்துள்ளோம். மனித வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வான திருமணம் அதன் வயது குறித்த வழிகாட்டல்களே ஒரு இறை வேதத்தில் இல்லை என்பதை விளக்கியுள்ளோம். அடுத்ததாக இந்து மதத்தில் திருமண வயதிற்கான நெறிகள் காணப்பட்டாலும் பாலுறவுக்கான வயதாக சிறு வயதை கூறுவதை தெளிவு படுத்தியுள்ளோம். இன் ஷா அல்லாஹ் இந்த தொடரில் இஸ்லாம் கூறும் திருமண வயதும் அதன் குறிகாட்டிகள் எவை என்பதையும் விளக்குவோம். திருமண வயது:             இஸ்லாம் திருமண குறித்து பேசும் போது இந்த வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணிட்டு குறிப்பிட வில்லை. மாறாக உயிரியல் குறிகாட்டிகளை(Biological Indicators) முன்வைக்கிறது. இது குறித்து முதலில் குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை காண்போம். وَابْتَلُوا الْيَتَامَى حَتَّى إِذَا بَلَغُوا النِّكَاحَ فَإِنْ

இந்து மதத்தில் திருமண வயது

Image
     நபி(சல்)- ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் குறித்து அவதூறுகளைக்கூறி விமர்சிக்கும் வரிசையில் இப்போது இந்துத்துவாவினரும் சேர்ந்துள்ளனர். இவர்கள் மிசனரிகளின் சரக்கை மொழியாக்கம் செய்து, அவர்களது குற்றச்சாட்டைத்தான் இவர்களும் முன்வைக்கின்றனர். நாம் சென்ற தொடர்களில் இத்தகைய விமர்சனங்களுக்கு தக்க வரலாற்று ஆவணங்களைக் கொண்டு பதிலளித்துள்ளோம். நபி(சல்) அவர்களின் மீது அவதூறுகளை கூறி விமர்சித்ததின் மூலம் இந்த இந்துத்துவா கும்பல், இவர்களது கடவுளர்களின் நிலை என்ன என்பதை நாம் கூறும் நிலைக்கு நம்மை  கொண்டு வந்துள்ளனர். அடுத்ததாக இவர்கள் மேலும் ஒரு குற்றச்சாட்டை இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் மற்றும் இஸ்லாமிய அரசர்கள் மீது வைக்கின்றனர். அதாவது இந்தியாவின் மீது இஸ்லாமிய படை எடுப்பின் பின்பு தான் இந்துக்களிடம் குழந்தை திருமணம் ஏற்பட்டது என்ற அவதூறையும் பரப்பி வருகின்றனர். ஆக இவர்களது இத்தகைய அவதூறுகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் அவர்களது கடவுளர்களின் வரலாறு மற்றும் புராணங்கள் என்ன கூறுகிறது என்பதையும் பண்டைய கால இந்தியாவில் எத்தகைய திருமண முறைகள் இருந்தது என்பதையும் இந்த கட்டுரையில் இன்ஷா அல்லாஹ் காண்போம்.