Posts

Showing posts from July, 2015

"நீதி" யின் பெயரால் அநீதி!!

Image
By   Nadodi Tamilan கடந்த  வருடம் மட்டும், சீனாவில்  மரண தண்டனைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2400 . இது உலகிலுள்ள மற்ற நாடுகளை விட மூன்று மடங்கு அதிகம் . (உலக மனித உரிமை அமைப்பு)(1) அமெரிக்காவில், இந்த நூற்றாண்டின் ஒவ்வரு வருடத்திலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், இறுதியில் நிரபராதி என்று அறியப்பட்டுள்ளனர். (2) மற்றொரு ஆய்வின் படி, அமெரிக்காவில் 1973 முதல் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் 343 பேர், நிரபராதியாக விடுவிக்கப்பட்டு இருக்க வேண்டும். (3) குற்றம் சாட்டப்பட்டவர்களை  அடித்து துன்புறுத்துவது, பொய் குற்றச்சாட்டில் மக்களை கைது செய்வது, மத/இன வெறியின் அடிப்படையில் மக்களை அணுகுவது  இந்தியாவில் அதிகம் நடப்பதால், ஒரு நிரபராதி தூக்கிலடப்படுவதற்கான சாத்தியக்கூறு  மிகவும் அதிகம். உதாரணமாக இன்று தூக்கிலிடப்பட்ட, யாகூப் மேனன் விடயத்தை எடுத்துக்கொள்வோம்: "சரியான ஆதாரம்   இல்லாமல், யாகூப் மேனனை கொன்றுவிட்டார்கள்" "யாகூப் மேனனை தூக்கிலிட்டது  தவறு" "வாய்மொழி உத்திரவாதம் மூலம் அவரை சரணடைய செய்து, அவர் உதவியால் ப

'அநாதை' மரபணுக்கள்............ (அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு)

Image
                                                                      இறைவனின் திருப்பெயரால்...  'அநாதை' மரபணுக்கள்... 'அநாதை' மரபணுக்கள் (உருவகப்படம்) Image courtesy: New Scientist Magazine நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியையும் சமாதானமும் நிலவுவதாக... " NOT having any family is tough. Often unappreciated and uncomfortably different, orphans have to fight to fit in and battle against the odds to realise their potential. Those who succeed, from Aristotle to Steve Jobs, sometimes change the world. Who would have thought that our DNA plays host to a similar cast of foundlings? When biologists began sequencing genomes, they discovered that up to a third of genes in each species seemed to have no parents or family of any kind" -  All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013. குடும்பம் இல்லாமல் இருப்பது கடினமானது. ஊக்கமில்லாமலும், அசௌகர்ய உணர்வோடும், இப்படியான ஆதரவற்றவர்கள், தங்களின் திறமைகளை வெளிப்படுத்த போராட வேண

கூடைப்பந்து விளையாட்டில் சாதனை படைத்த அமெரிக்க முஸ்லிம் மாணவி - இப்தார் விருந்திற்கு ஒபாமா அழைப்பு.

Image
அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் பல்கலைகழக மாணவி இவர். உயர் நிலை பள்ளியில் படிக்கும் பொது, பெண்கள் கூடைபந்து விளையாட்டில் மாநிலத்திலேயே முதலாவதாக பாய்ண்ட்ஸ் எடுத்து சாதனை படைத்துள்ளார். பில்கிஸ் அப்துல் காதிர், ஹிஜாப் அணிவது தன் உரிமை என்பதை நிலைநாட்டி அமெரிக்காவில் ஹிஜாப் அணிவதற்க்கு இருந்த தடையை நீக்கி, வெள்ளைமாளிகையில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அதிபர் ஓபாமாவால் கௌரவிக்கப்பட்டார்.  இவர் அங்குள்ள புகழ்பெற்ற இந்தியானா ஸ்டேட்ஸ் அணிக்காக ஆடும் basketball நட்சத்திர வீராங்கனை ஆவார். Basketball ஆட்டத்தில் தன் கல்லூரியில் நட்சத்திர வீராங்கனையாக இருந்த பில்கிஸ் அப்துல் காதிர், அமெரிக்க அணிக்காக ஆட வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டிருந்தார். 2014 ல் மேற்படிப்புக்கு சொல்லும் பொழுது உள்நாட்டில் எதாவது ஒரு அணியில் சேர்ந்து சிறப்பாக ஆடி தன் நாட்டு அணியில் இடம் பெற முடிவுசெய்து, அதற்க்காக பதிவு செய்து காத்திருந்தார், பதிலும் வந்தது, தன் கனவை சுக்கு நுறாக்கும் பதிலாக அது இருந்தது. அமெரிக்காவின் விளையாட்டு துறை FIBA உள்நாட்டு அணியில் தொழில் ரீதியாக ஆடும் பெண்கள் ஹிஜாப் அணிய தடை வ

மாற்று மதத்தை சேர்ந்தவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ரமலான் நோன்பு!

Image
" கடந்த 4 நாட்களாக, ஒரு மாற்று மத கண்ணோட்டத்தில் இதை அறிந்து கொள்ள, நான் நோன்பு வைத்து வருகின்றேன். மிகவும் சிரமமாக உள்ளது. வெளியில் இருந்து பார்ப்பதை விட, அனுபவிக்கும் போது  தான் அதன் கடினம் தெரிகின்றது. நோன்போடு இருக்கும் போது,  ஆவல் அதிகம் ஏற்படுகின்றது. ஆசையை அடக்குவது, இறை கட்டளையினால் நோன்பு வைக்கும் மக்களுக்கு உண்மையிலேயே உதவும்." (Khaleej Times நிருபர்) "என்னுடைய நோன்பு வெற்றிகரமாக இருந்ததின் கரணம் என்னவென்றால், உணவின் அத்தியாயவசத்தையும், மேலும் சமுதாயத்தில் உணவின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது. உணவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, அது நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு, விருந்தோம்பலின் அடையாளமாகவும் உள்ளது." ( Kevin Childress)  உலக மக்கள் தொகையில் 4 ல் 1 நபர்  நோன்பு வைக்கின்றனர்  என்பதனால்,   அதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதில் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். Japan Students Fasting கடந்த சில வருடங்களாக இதன் விழிப்புணர்வு முஸ்லிம் அல்லாத மக்களிடம் அதிகரித்து வருகின்றது.  தன்னால் இயன்ற அளவிற்கு,  அவர்களும் நோன்பு வைத்து வருகின்றனர். குறி

முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் கிறிஸ்துவர்களுக்கான உடன்படிக்கை - கிருஸ்த்துவ மடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கடிதம்

Image
முஸ்லிம்கள், கிருத்துவர்களை எப்படி நடத்த வேண்டும்?  நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டதாக நம்பப்படும் இந்த கடிதத்தின் சுருக்கம்: இன்று உலகில் முஸ்லிம், கிறிஸ்துவ மக்களுக்கு இடையேயான உறவு  பலவீனப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துவ சகோதர(ரி)களுக்கு நாம் சொல்லிக்கொள்வது என்னவென்றால், ஒரு உண்மையான  முஸ்லிம் எந்த விதத்திலும் அவர்களை துன்புறுத்த மாட்டான் என்பதை இந்த கடிதத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம், மேலும் முஹம்மத் நபி (ஸல்) தன்னுடைய ஆளுமையின் கீழ் உள்ள சிறுபான்மையினரை எப்படி நடத்தினார்கள் என்பதற்கும் இது  ஒரு சான்று. ( Saint Catherine's Monastery, Egypt) பல ஆதாரப்பூர்வமான வரலாற்று பதிவுகள், St.Catherine (Egypt)  நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் சில பதிவுகள், இஸ்லாமிய நீதிபதிகளால் வரலாற்று நம்பகத்தன்மை வாய்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. துருக்கிய இஸ்லாமிய படைகள், எகிப்தை வெற்றிக்கொண்டபோது, அங்கே உள்ள மடத்தில் இருந்து எடுக்கப்பட்டு, இஸ்தான்பூல் அரண்மனையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இதனுடைய மூல பிரதி, இன்றும் இஸ்தான்பூல்  அருங்காட்சியத்தில் உள்ளது. கடிதத்தின் சுருக்கம்: