Posts

Showing posts from October, 2020

உஸ்மான்(ரலி) அரசாணையும் இப்னு மஸ்ஊத்(ரலி) எதிர்ப்பும் ஏற்பும்

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ         உஸ்மான்(ரலி) அவர்கள், அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவினால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனை இஸ்லாமிய பேரரசின் பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார்கள். அதனோடு ஒரு கட்டளையும் பிறப்பித்தார்கள். அதாவது ஏனைய குர்ஆன் பிரதிகளை அழிக்க கட்டளை பிறப்பித்தார்கள். குர்ஆனை ஸைத் இப்னு ஸாபித்(ரலி) தொகுத்ததற்கும், ஏனைய குர்ஆன் பிரதிகளை பரிமுதல் செய்து எரிக்கவும் பிறபிக்கப்பட்ட கட்டளையை எதிர்த்தவர் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆவார்கள். இதற்கு இஸ்லாமோஃபோபுகள் வைக்கும் வாதங்களும் அதற்கான பதிலும்  இதோ.  இஸ்லாமோ போஃபுகளின் ஆதாரமும் குருட்டு வாதமும் உஸ்மான்(ரலி) அமைத்த குர்ஆன் தொகுப்பு குழுவும் அதன் முடிவும் குர்ஆன் பிரதிகளை எரிப்பது யாரது முடிவு?? இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் எதிர்ப்பும் ஏற்பும்  வரலாற்று நூல்களின் பதிவுகள் இப்னு அபி தாவூத் அவர்களின் கருத்து இப்னு அதிர் அவர்களது வரலாற்று குறிப்பு இப்னு அஸாகிரின் கருத்து இப்னு கஸீரின் கருத்து அபுபக்கர் அல் அன்பாரியின் கருத்து ஆதாரம்: وَلِذَلِكَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ يَا أَهْلَ الْعِرَاقِ اكْتُمُوا الْمَصَاحِفَ الَّتِي عِن

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ           குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விளக்கங்கள் கொடுக்கப்படும் போது அதற்கு இஸ்லாமிய எதிர்ப்பாளர்களிடம் புறப்படும் விமர்சனங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்த தலைப்பு ஆகும். இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் ஓதல் குறித்த சிறப்புகளை முன்னிறுத்தி, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது தொகுப்பில் குறை இருப்பதாகவும் , நபி(சல்) அவர்களால் புகழப்பட்ட இப்னு மஸ்ஊத்(ரலி) போன்ற நபித்தோழரே இதனை எதிர்த்துள்ளார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இஸ்லாமோஃபோபுகள் பெரும் முயற்சியை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்வின் உண்மை நிலை என்ன என்பதை இங்கு காண்போம் இன் ஷா அல்லாஹ். இஸ்லாமோ போஃபுகளின் ஆதாரங்களும் குருட்டு வாதமும் இப்னு மஸ்ஊத்(ரலி) மட்டும்தான் குர்ஆன் ஓதலில் தலைசிறந்தவரா? நபி(ஸல்) அவர்களிடம் முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்த ஸைத்(ரலி) அபூபகர் அல் அன்பாரி அவர்களின் கருத்து இஸ்லாமோ போஃபுகளின் குருட்டு வாதம்       குர்ஆனை ஓதவும் அதனை கற்றுக்கொடுக்கவும் நபி(சல்) அவர்களால் பெரிதும் முன்னிறுத்தப்பட்டவர் இப்னு மஸ்ஊத்(ரலி) என்று மிசனரிகள் முதற்கொண்டு பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால

குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ        நபி(சல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு குர்ஆனை தொகுக்கும் குழுக்கள் இரண்டு முறை இஸ்லாமிய கலிஃபாக்களால் நியமிக்கப்பட்டுள்ளது. முதல் முறை அபூபக்ர்(ரலி) அவர்களால், இரண்டாவது முறை உஸ்மான்(ரலி) அவர்களால். இரண்டிலுமே ஸைத் பின் ஸாபித்(ரலி) பங்குபெற்றுள்ளார்கள். குர் ஆன் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களிற்கான விளக்கங்களை புரிந்து கொள்ள முதலில் மேற்குறிப்பிட்ட ஸைத பின் ஸாபித்(ரலி) அவர்களின் நியமனத்தின் நியாயங்கள அறிந்து கொள்வது அவசியமாகும். அது குறித்த ஹதீஸ்களை முதலில் பார்ப்போம். அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தில் குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தில் குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத்(ரலி) நபி(சல்) அவர்களது காலத்திலேயே குர்ஆன் முழுவதையும் முழுமையாக மனனமிட்ட ஸைத் பின் ஸாபித்(ரலி) இறுதி ஓதல் "  அர்தா அல் ஆஹீரா " வின் சாட்சி ஸைத் இப்னு ஸாபித்(ரலி அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தில்           ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.          யமாமா பே

பெரும்பான்மை மக்களின் ஓதலும் உஸ்மான்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பும்

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ         குர்ஆன் எப்படி மக்கள் உள்ளங்களில் மனனம் செய்யப்பட்டு தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டது என்பதை இஸ்லாமியர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூவும் போது, இங்கிருக்கும் கிறித்தவ மிசனரிகளும், இஸ்லாமோஃபோபுகளும் , ஹதீஸ்களில் காணப்படும் குர்ஆன் தொகுக்கப்பட்டது குறித்த வரலாற்று குறிப்புகளை முன்வைத்து சில மூடத்தனமான விமர்சனங்களை முன்வைத்த ஆர்தர் ஜெஃப்ரி போன்ற ஓரியண்டலிஸ்டுகளின் புத்தகங்களில் இருந்தும், தற்காலத்தில் சில இஸ்லாமிய எதிர்ப்பு ஆங்கில வளைத்தளத்தில் பதியப்பட்டவைகளையும் அடிப்படையாக கொண்டு தாங்களே தேடி கண்டறிந்தது போன்று விமர்சனங்களை செய்து வருகின்றனர். உண்மையில் சொல்வதாக இருந்தால் ஆர்தர் ஜெஃப்ரி போன்ற ஓரியண்டலிஸ்டுகளே, இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் இது குறித்து எழுதிய பண்டைய கிரந்தங்களில் இருந்துதான் இத்தகைய விமர்சனங்களை, அறியாமையையும், காழ்புணர்ச்சியையும் அதில் ஏற்றி தங்களது புத்தகங்களில் வழங்கி உள்ளனர். இந்த விசயங்களில் ஆர்தர் ஜெஃரியின் தந்தையாக கருத்தப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களின் நூல்கள் எல்லாம் கிபி 10ம் நூற்றாண்டுகளில் இருந்து இஸ்லாமிய சமூகத்தால் பார்

உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ     குர்ஆனின் பாதுகாப்பு குறித்தும் அது எவ்வாறு பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த இஸ்லாமிய சமூகம் நன்கு அறியும். ஆயினும் இன்று முளைத்திருக்கும் சில மிசனரிகளும் தங்களை முன்னாள் முஸ்லீம்கள் என்று கூறித்திரியும் சிலரும் இஸ்லாம் மீது கொண்ட காழ்ப்புணர்சியாலும் , ஃபோபியாவினாலும் குர்ஆன் எந்த வழியிலும் பாதுக்காக்கப்பட வில்லை என்று அவதூறு பரப்பி திரிகின்றன. ஆனால் அப்படி பரப்பி திரியும் அரைவேக்காடுகள் ஒரு விஷயத்தை கவனிக்கவோ பகுத்தறிவை கொண்டு சிந்திக்கவோ மறந்துவிட்டன.  எழுத்து வடிவிலும் ஓசை வடிவிலும் பாதுகாக்கப்படாத ஒரு ஏடு எப்படி பல கோடி முஸ்லீம்களிடம் அதுவும் உலகின் பல பகுதியில் வாழும் முஸ்லீம்களிடம் ஒரே மாதிரி இருக்கிறது என்பதை இவர்கள் பகுத்தறிவு ரீதியாக விளக்க வேண்டும். எந்த வழியிலும் பாதுகாக்கப்படாத ஒரு ஏடு பல கோடி மக்களின் கையில் ஒரே மாதிரி இருக்கிறது என்பது ஒரே இரவில் அனைவரிடமும் வந்துவிட வில்லை என்பதற்கு போதிய சான்று. ஆக இவர்களது வெத்து வாதத்தால் நம் கண் முன்பு இருக்கும் ஒரு விசயத்தை தெளிவாக விளக்க முடியவில்லை என்றால் இவர்களது வாதத்தில்