Posts

Showing posts from July, 2019

எறும்புகள் - திருக்குர்ஆன் சொல்வது அறிவியலா அல்லது அபத்தமா?

Image
ஏக இறைவனின் திருப்பெயரால்                 இவ்வுலகில் எத்தனையோ சித்தாந்தங்கள் மக்களால் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில் பல கடல் போல் பெருகி சிறிய குட்டையாக மாறி வழக்கொழிந்து சுவடுகளே இல்லாமல் காணமல் போனவையும் உண்டு. இப்படி தோன்றி மறையும் சித்தாங்கள் மத்தியில் வெறும் 14 நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட 200 கோடி மக்களை வென்றெடுத்த, உலக மக்கள் தொகையில் 3ல் 1 வரை வென்றெடுத்த, அந்த மக்களின் வாழ்க்கையில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் நிர்ணயம் செய்த, செய்து கொண்டிருக்கும் அந்த மாபெரும் மார்க்கமான இஸ்லாம், இன்றும் அதன் எதிரிகளால் சித்தாந்த ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. எதிர்ப்பால் வளர்ந்த இஸ்லாம், இன்றும் மக்களை வென்றெடுத்த வண்ணமே உள்ளது. இப்படி கடும் எதிர்ப்புகளின் மத்தியிலும் மனிதனை தன் பால் ஈர்க்கும், அந்த மகத்தான மார்க்கமான இஸ்லாமில் என்னதான் உள்ளது என்பதையும் அதன் மீது வைக்கப்படும் சித்தாந்த ரீதியிலான விமர்சனங்களுக்கும் தக்க ஆதாரங்களுடன் பதிலளிப்பதே இந்த தொடரின் நோக்கமாகும். குர்ஆன்