Posts

Showing posts from October, 2015

எதிர்தொடர் 18: விதியின் விதி

Image
ஏக இறைவனின் திருப்பெயரால்             இதுவரை நாம் சந்தித்த பல தொடர்களில் இது ஒரு தத்துவியல் சார்ந்த விவாதத்தை கொண்ட ஒரு தொடர் . இந்த தொடரில் கட்டுரையாளரின் இஸ்லாம் கூறும் விதி குறித்த பல கேள்விகளையும் விமர்சன்ங்களையும் [1] எதிர் கொள்ளும் தொடராக இது இருக்கும் இன்ஷா அல்லாஹ் . விதி குறித்து மனித விவாதம் :      விதி என்பது இஸ்லாம் மட்டும் குறிப்பிடும் கோட்பாடு அல்ல . விதி குறித்து மனிதன் பல நூற்றாண்டுகளாக விவாத்தித்தும் இது குறித்த தெளிவான நிலையை இன்றுவரை அடைய முடிவில்லை என்பதுதான் நிதர்சன உன்மை . மனிதன் இதை நியதிக்கொள்கை (determinism) என்றும் சுயதேர்வு என்றும் மனிதன் பல நூற்றாண்டுகளாக விதி குறித்து பல பெயர்களில் விவாதம் செய்தான் என்பதையும் இன்றும் விவாத்தித்து கொண்டுள்ளான் என்பதையும் கட்டுரையாளர் ஏனோ தெரிந்து இருக்க வில்லை . நியதிகொள்கை :      இது இவ்வுலகில் நடைபெறும் அனைத்து செயல்களும் முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதும் அதை இயற்கையாய் தோன்றும் சூழல்கள் தான் நிர்ணயக்கின்றன