Posts

Showing posts from February, 2016

இஸ்லாத்தின் பார்வையில் அடிமை முறையும், சமத்துவமும் - 1

Image
இஸ்லாம் அடிமைகளை ஆதரிக்கின்றது ..அதனால் இஸ்லாத்தில் சமத்துவம் இல்லை என்று கூறும் சிலரின் கூற்றில் உள்ள முரண்பாடுகளை எடுத்துக்காட்டுவதற்காக இந்தத் தொடர் எழுதப்படுகின்றது. அடிமைத் தனம் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பாகவே இருந்து வந்த  ஒரு கொடுமையான பழக்கம்.  கேட்பார் யாருமில்லை... தடி எடுத்தவன் தண்டல் காரன்  என்ற பழமொழி இன்றைக்கு எவ்வாறு பொருந்துமோ, அதைவிட பல்லாயிரம் மடங்கு கூடுதலாக அன்று பொருந்தியது. ஒரு மனிதன், மற்றொரு மனிதனின் சொத்தாக கருதப்பட்டான்  வாரச் சந்தையில் மனிதர்களும் விற்கப்பட்டனர்  தந்தை தன் வாரிசுகளை விற்கவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ அதிகாரம் கொண்டவனாக  இருந்தான்  தங்களிடம் உள்ள அடிமைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, சமூகத்தில் அவர்களின் அந்தஸ்துகள் உயர்ந்தன  ஒரு அடிமைக்  கொல்லப்பட்டால், அதற்க்கு எந்த தண்டனையும் கிடையாது  எந்த ஒரு ரோமன் பேரரசிடரிடமும், குறைந்த அளவு 20,000 அடிமைகள் இருந்தனர்  தங்களின் பொழுது போக்கிற்காக, அடிமைகளை சண்டையிட வைத்து  சாகடித்த சம்பவங்கள் ஏராளம்   சமீப காலங்களில் கூட இன்னும்  மோசமாக பலராலும்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது